பங்குச் சந்தைகளை பதம் பார்த்த கொரோனா வைரஸ்……சென்செக்ஸ் 214 புள்ளிகள் வீழ்ச்சி…

 

பங்குச் சந்தைகளை பதம் பார்த்த கொரோனா வைரஸ்……சென்செக்ஸ் 214 புள்ளிகள் வீழ்ச்சி…

இந்திய பங்குச் சந்தைகளில் இன்று பங்கு வர்த்தகம் மோசமாக இருந்தது. சென்செக்ஸ் 214 புள்ளிகள் குறைந்தது.

சர்வதேச நாடுகளில் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வரும் நிலையில், இந்தியாவிலும் அதனால் பாதிக்கப்பட்டோர் அதிகரித்து வருகின்றனர். அமெரிக்க பெடரல் வங்கி வட்டி விகிதத்தை குறைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது போன்ற காரணங்களால் இந்திய பங்குச் சந்தைகளில் இன்று வர்த்தகம் சரிவை சந்தித்தது.

இந்தியாவில் பரவும் கொரோனா வைரஸ்

மும்பை பங்குச் சந்தையில் இன்று 688 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. 1,712 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது. 134 நிறுவன பங்குகளின் விலையில் எந்தவித மாற்றமும் இன்றி முடிவடைந்தது. மும்பை பங்குச் சந்தையில் பட்டியிலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.147.03 லட்சம் கோடியாக சரிந்தது. 

அமெரிக்க பெடரல் வங்கி

இன்றைய வர்த்தகத்தின் முடிவில், மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 214.22 புள்ளிகள் வீழ்ச்சி கண்டு 38,409.48 புள்ளிகளில் நிலை கொண்டது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டி 52.30 புள்ளிகள் சரிந்து 11,251.00 புள்ளிகளில் நிலைகொண்டது.