பங்குச் சந்தைகளில் தொடர் சரிவு! சென்செக்ஸ் 268 புள்ளிகள் சரிந்தது….

 

பங்குச் சந்தைகளில் தொடர் சரிவு! சென்செக்ஸ் 268 புள்ளிகள் சரிந்தது….

பங்குச் சந்தைகளில் தொடர்ந்து 2வது நாளாக இன்றும் வர்த்தகம் சரிவு கண்டது. சென்செக்ஸ் 268 புள்ளிகள் குறைந்தது.

பங்குச் சந்தைகளில் தொடர் சரிவு! சென்செக்ஸ் 268 புள்ளிகள் சரிந்தது….

கடந்த ஏப்ரல்-ஜூன் காலாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 5.7 சதவீதம் என்ற அளவில் குறைவாகவே இருக்கும் நொமுரா நிறுவனம் கணித்துள்ளது. மேலும் சர்வதேச பொருளாதார சரிவு ஏற்படும் என்ற அச்சம் காரணமாக ஆசிய பங்குச் சந்தைகளில் வர்த்தகம் சரிவு கண்டது. அதன் தாக்கம் இந்திய பங்குச் சந்தைகளிலும் எதிரொலித்தது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் வெளிமதிப்பு இன்று வர்த்தகத்தின் இடையே ஏற்றம் கண்ட போதும் அது பங்கு வர்த்தகத்தின் ஏற்றத்துக்கு வழி வகுக்கவில்லை.

சென்செக்ஸ் கணக்கிட உதவும் 30 நிறுவன பங்குகளில், ஹீரோமோட்டோ கார்ப், மாருதி, இன்போசிஸ், டெக்மகிந்திரா, இந்துஸ்தான் யூனிலீவர் மற்றும் பஜாஜ் ஆட்டோ உள்பட 8 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. அதேவேளையில், டாடாமோட்டார்ஸ், யெஸ்பேங்க், டாடா ஸ்டீல், ஓ.என்.ஜி.சி., இண்டஸ்இந்த் வங்கி, ஸ்டேட் வங்கி உள்பட 22 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது.

பங்கு வர்த்தகம்

மும்பை பங்குச் சந்தையில் இன்று 648 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. 1,828 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது. இருப்பினும், 150 நிறுவன பங்குகளின் விலையில் மாற்றம் இன்றி முடிவடைந்தது. மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.138.79 லட்சம் கோடியாக குறைந்தது. நேற்று வர்த்தகம் முடிவடைந்த போது நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.140.32 லட்சம் கோடியாக இருந்தது.

இன்றைய வர்த்தகத்தின் முடிவில், மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 267.64 புள்ளிகள் குறைந்து 37,060.37 புள்ளிகளில் முடிவுற்றது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டி 98.30 புள்ளிகள் சரிந்து 10,918.70 புள்ளிகளில் நிலை கொண்டது.