பங்குச் சந்தைகளில் கரடியின் ஆதிக்கம்! சென்செக்ஸ் 127 புள்ளிகள் வீழ்ச்சி

 

பங்குச் சந்தைகளில் கரடியின் ஆதிக்கம்! சென்செக்ஸ் 127 புள்ளிகள் வீழ்ச்சி

நம் நாட்டு பங்குச் சந்தைகளில் இன்று வர்த்தகம் மிகவும் மோசமாக இருந்தது. சென்செக்ஸ் 127 புள்ளிகள் வீழ்ச்சி கண்டது.

பிரேசில் மற்றும் அர்ஜெண்டினா ஆகிய நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மீது அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கட்டணங்கள் விதித்துள்ளார். இதனால் புதிய வர்த்தக போர் ஏற்படுமோ என்ற பதற்றம் ஏற்பட்டுள்ளது. கடந்த செப்டம்பர் காலாண்டில் நம் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 6 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 4.5 சதவீதமாக குறைந்தது. இது போன்ற காரணங்களால் பங்குச் சந்தைகளில் வர்த்தகம் சரிவை சந்தித்தது.

டிரம்ப்

சென்செக்ஸ் கணக்கிட உதவும் நிறுவன பங்குகளில், பஜாஜ் ஆட்டோ, டாடா கன்சல்டன்சி சர்வீசஸ், கோடக்மகிந்திரா வங்கி, இன்போசிஸ், எச்.டி.எப்.சி. நிறுவனம் மற்றும் பார்தி ஏர்டெல் உள்பட 9 நிறுவன பங்குகளின் விலை சரிந்தது. யெஸ் பேங்க், டாடா ஸ்டீல், வேதாந்தா, மகிந்திரா அண்டு மகிந்திரா, இண்டஸ்இந்த் வங்கி  மற்றும் டாடா மோட்டார்ஸ் உள்பட 21 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது.

பஜாஜ்

மும்பை பங்குச் சந்தையில் இன்று 868 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. 1,603 நிறுவன பங்குகளின் விலை சரிந்தது. 203 நிறுவனங்களின் பங்குகளின் விலையில் எந்தவித மாற்றமும் இன்றி முடிவடைந்தது. மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.153.46 லட்சம் கோடியாக குறைந்தது.

டாடா மோட்டார்ஸ்

இன்றைய வர்த்தகத்தின் முடிவில், மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 126.72 புள்ளிகள் சரிந்து 40,675.45 புள்ளிகளில் நிலை கொண்டது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டி 54 புள்ளிகள் வீழ்ந்து 11,994.20 புள்ளிகளில் முடிவுற்றது.