பங்குச் சந்தைகளில் அடி மேல் அடி! சென்செக்ஸ் 208 புள்ளிகள் குறைந்தது.

 

பங்குச் சந்தைகளில் அடி மேல் அடி! சென்செக்ஸ் 208 புள்ளிகள் குறைந்தது.

தொடர்ந்து 3வது நாளாக இன்றும் பங்குச் சந்தைகளில் வர்த்தகம் படுத்தது. சென்செக்ஸ் 208 புள்ளிகள் வீழ்ச்சி கண்டது.

சீனாவில் பரவி வரும் கொரோனா வைரஸ் சர்வதேச அளவில் பெரும் கவலை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பட்ஜெட் தொடர்பான எதிர்பார்ப்புகள் மற்றும் முன்னணி நிறுவனங்களின் நிதிநிலை முடிவுகளை எதிர்பார்த்து முதலீட்டாளர்கள் அதிக எச்சரிக்கையுடன் வர்த்தகத்தில் ஈடுபட்டனர். இது போன்ற காரணங்களால் இந்திய பங்குச் சந்தைகளில் வர்த்தகம் சரிவை சந்தித்தது.

சீனாவில் பரவி வரும் வைரஸ்

சென்செக்ஸ் கணக்கிட உதவும் 30 நிறுவன பங்குகளில், நெஸ்லே இந்தியா, டி.சி.எஸ்., இன்போசிஸ் மற்றும் பார்தி ஏர்டெல் உள்பட 9 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. ஓ.என்.ஜி.சி., என்.டி.பி.சி., கோடக் மகிந்திரா வங்கி, மாருதி மற்றும் எச்.டி.எப்.சி. நிறுவனம் உள்பட 21 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது.

நெஸ்லே இந்தியா

மும்பை பங்குச் சந்தையில் இன்று 1,089 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. 1,415 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது. 174 நிறுவன பங்குகளின் விலையில் எந்தவித மாற்றமும் இன்றி முடிவடைந்தது. மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.158.23 லட்சம் கோடியாக குறைந்தது.

ஓ.என்.ஜி.சி.

இன்றைய வர்த்தகத்தின் முடிவில், மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 208.43 புள்ளிகள் வீழ்ந்து 41,115.38 புள்ளிகளில் நிலைகொண்டது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டி 62.95 புள்ளிகள் இறங்கி 12,106.90  புள்ளிகளில் முடிவுற்றது.