பங்குச்சந்தைகள் சில புள்ளிகள் சரிந்து இறக்கத்தில் முடிவடைந்தன

 

பங்குச்சந்தைகள் சில புள்ளிகள் சரிந்து இறக்கத்தில் முடிவடைந்தன

பங்கு சந்தைகள் இன்றைய வர்த்தக நேர முடிவில் சில புள்ளிகள் சரிந்து இறக்கத்தில் முடிவடைந்தன

மும்பை: பங்கு சந்தைகள் இன்றைய வர்த்தக நேர முடிவில் சில புள்ளிகள் சரிந்து இறக்கத்தில் முடிவடைந்தன.

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் மற்றும் இன்ஃபோஸிஸ் பங்குகள் அதிகம் விற்கப்பட்டதால் இன்றைய வர்த்தக நேர முடிவில் சென்செக்ஸ் 0.22 சதவீதம் அல்லது 79.13 புள்ளிகள் சரிந்து 35158.55 புள்ளிகளில் முடிவடைந்தது. அதேபோல், தேசிய பங்குச்சந்தையான நிஃப்டி 0.12 சதவீதம் அல்லது 13.20 புள்ளிகள் சரிந்து 10585.20 புள்ளிகளில் முடிவடைந்தது.

இன்றைய வர்த்தகத்தில் 1,316 பங்குகள் உயர்வையும் 1,203 பங்குகள் சரிவையும் கண்டன. 144 பங்குகளில் எந்த மாற்றமும் இல்லை.

தேசிய பங்குச்சந்தையான நிஃப்டியில் யெஸ் வங்கி (+5.53%), ஏசியன் பெய்ண்ட்ஸ் (+3.57%) மற்றும் எச்.பி.சி.எல் HPCL (+5.1%) நிறுவனங்களின் பங்குகள் பங்கு வர்த்தக பட்டியலில் முதல் இடங்களைப் பெற்றன. பாரதி ஏர்டெல் (-2.12%) மற்றும் இன்ஃபோஸிஸ் (-2.37%) பங்குகள் அதிக புள்ளிகள் சரிந்து நஷ்டத்தில் முடிவடைந்தன.