பங்காளிகளா அடிச்சு தூக்கலாமா : ‘விஸ்வாசம்’ மரணமாஸ் டிரைலர் ரிலீஸ்!

 

பங்காளிகளா அடிச்சு தூக்கலாமா : ‘விஸ்வாசம்’ மரணமாஸ் டிரைலர் ரிலீஸ்!

‘தல’ அஜித் நடிப்பில் உருவாகியுள்ள விஸ்வாசம் படத்தின் டிரைலர் இன்று வெளியானது, இதனால் அஜித் ரசிகர்கள் உற்சாகத்தில் திளைத்துள்ளனர்.

சென்னை: ‘தல’ அஜித் நடிப்பில் உருவாகியுள்ள விஸ்வாசம் படத்தின் டிரைலர் இன்று வெளியானது, இதனால் அஜித் ரசிகர்கள் உற்சாகத்தில் திளைத்துள்ளனர்.

‘வீரம்’, ‘வேதாளம்’, ‘விவேகம்’ வரிசையில் 4வது முறையாக இயக்குநர் சிவா-அஜித் கூட்டணியில் உருவாகியுள்ளது ‘விஸ்வாசம்’. இதில் அஜித்துக்கு ஜோடியாக லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்துள்ளார். சத்யஜோதி ஃபிலிம்ஸ் தயாரித்துள்ள இப்படம் வரும் பொங்கல் பண்டிகையொட்டி  உலகம் முழுவதும் ரிலீசாகவுள்ளது.

viswasam

டி.இமான் இசையில் வெளியான பாடல்கள் அனைத்தும் ரசிகர்களை கவர்ந்துள்ள நிலையில், படத்தின் டீசரை வெளியிடுமாறு தல ரசிகர்கள் படக்குழுவிடம் கோரிக்கை வைத்து வந்தனர்.

ajith

இந்நிலையில், தல அஜித் நடித்துள்ள ‘விஸ்வாசம்’ திரைப்படத்தின் டிரைலர் இன்று வெளியாகியுள்ளது. விஸ்வாசம் டிரைலரின் ஓபனிங்கில் கெத்தாக வேட்டியை மடித்து வரும் ‘தல’ அஜித் வாழ்க்கையில் ஒரு தடவை அழாத பணக்காரனும் இல்ல, ஒரு தடவை சிரிக்காத ஏழையும் இல்ல என்ற பஞ்ச் வசனம் பேசி அதகளபடுத்துகிறார். ‘பங்காளிகளா அடிச்சு தூக்கலாமா’ என்ற டயலாக்குடன் பக்கா கமர்ஷியலாக உள்ள இந்த டிரைலரில் அஜித்தின் மாஸான சண்டைக்காட்சிகள் இடம்பெற்றுள்ளன. நயன்தாராவுடன் ரொமான்ஸ், யோகிபாபு காமெடி ஒரு பக்கம் இருக்க, ‘பேரு தூக்குதூரை, ஊரு தேனிமாவட்டம் கொடுவிலார் பட்டி பொண்டாட்டி பேரு நிரஞ்சனா, பொண்ணு பேரு ஸ்வேதா ஒத்தைக்கு ஒத்த வாடா’ என்று மிரட்டியுள்ளார் அஜித்.

 விஸ்வாசம்  டிரைலரில்  மூலம் முழுக்க முழுக்க அஜித்தின் மாஸ் காட்டியுள்ளதால்   இப்படத்தின் மீது அதிக எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.