பங்காரு அடிகளாருக்கு விருது கொடுத்தது சரியா? தவறா? : கடுப்பான தமிழிசை

 

பங்காரு அடிகளாருக்கு விருது கொடுத்தது சரியா? தவறா? : கடுப்பான தமிழிசை

பங்காரு அடிகளாருக்கு விருது கொடுத்தது சரியா? தவறா? என அங்கு வரும் பெண்களை கேட்டால் கூறுவார்கள்  என பாஜக தமிழக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.

சென்னை : பங்காரு அடிகளாருக்கு விருது கொடுத்தது சரியா? தவறா? என அங்கு வரும் பெண்களை கேட்டால் கூறுவார்கள்  என பாஜக தமிழக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.

நாட்டின் 70வது  குடியரசு தினவிழா நாடு முழுவதும் இன்று கொண்டாடப்படுகிறது. இதன் காரணமாக பாஜக தமிழக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் சென்னை தியாகராய நகரிலுள்ள பாஜக அலுவலகத்தில் தேசியக் கொடி ஏற்றி மரியாதை செலுத்தினார். 

பின் செய்தியாளர்களைச் சந்தித்த அவரிடம் பங்காரு அடிகளாருக்குப் பத்ம ஸ்ரீ அளிக்கப்பட்ட விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளதே என்று கேள்வி எழுப்பப்பட்ட போது,  ‘சாமானிய மக்களுக்கு, குறிப்பாகப் பெண்களுக்கு ஒரு பிரமாண்டமான நம்பிக்கையை மேல்மருவத்தூர் கொடுத்துள்ளது. அதுமட்டுமல்ல மருத்துவ சேவை உள்ளிட்ட பல சேவைகளை வழங்கி வருவதன் அடிப்படையிலேயே பங்காரு அடிகளாருக்குப் பத்ம விருதுகள் வழங்கப்பட்டுள்ளது.  

 

விருது கொடுத்தது சரியா? தவறா? என அங்கு வரும் பெண்களை கேட்டால் கூறுவார்கள். எல்லாவற்றையும் கொச்சைப்படுத்த கூடாது. அவர்கள் எல்லாவற்றுக்கும் காசு வாங்கவில்லை. பல இடங்களில் முகாம்கள் நடத்துகின்றனர். அதனால்  தகுதியானவர்களுக்கு தான் மத்திய அரசு பத்ம விருதுகளைக் கொடுத்து உள்ளது’ என்றார்.