பக்ரீத் பண்டிகை கொண்டாட்டம்: சிறப்புத் தொழுகையில் ஈடுபட்ட இஸ்லாமியர்கள்!

பக்ரீத் பண்டிகை கொண்டாட்டம்: சிறப்புத் தொழுகையில் ஈடுபட்ட இஸ்லாமியர்கள்!

நாடு முழுவதும்  பக்ரீத் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. இதனால் மசூதிகளில், சிறப்புத் தொழுகை நடத்தப்பட்டது.

பக்ரீத் பண்டிகை கொண்டாட்டம்: சிறப்புத் தொழுகையில் ஈடுபட்ட இஸ்லாமியர்கள்!

நாடு முழுவதும்  பக்ரீத் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. இதனால் மசூதிகளில், சிறப்புத் தொழுகை நடத்தப்பட்டது.

பக்ரீத் பண்டிகை இன்று நாடு ம்,முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இதனால் இஸ்லாமியர்கள் அதிகாலை முதலே மசூதிகளில் சிறப்பு தொழுகை நடத்தினர். மும்பையில் உள்ள ஹமிதியா மசூதியில், ஏராளமான இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகைகள் நடத்தி வருகின்றனர். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஆயிரக்கணக்கானோர், பக்ரீத் தொழுகையில் ஈடுபட்டனர். இதனால் அங்கு போலீசார் பாதுகாப்புப் பணிக்காகக் குவிக்கப்பட்டனர். இதேபோல் டெல்லியில் உள்ள ஜும்மா மசூதியில், லட்சக்கணக்கானோர் ஒன்றுகூடிச் சிறப்புத் தொழுகை செய்து பக்ரீத் பண்டிகையைக் கொண்டாடினர். 

bakrid

தமிழகத்தைப் பொறுத்தவரை பக்ரீத் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. சென்னை திருவல்லிக்கேணி, எழும்பூர் போன்ற பகுதிகளில் உள்ள மசூதிகளில் சிறப்புத் தொழுகை செய்த இஸ்லாமியர்கள் ஒருவரையொருவர் கட்டியணைத்து வாழ்த்துக்களைப் பரிமாறிக் கொண்டனர்.