பக்தி பரவசமூட்டும் பழனி தைப்பூசம் -பழனியை நோக்கி நகர்ந்து வரும் நகரத்தார் காவடி.. 

பக்தி பரவசமூட்டும் பழனி தைப்பூசம் -பழனியை நோக்கி நகர்ந்து வரும் நகரத்தார் காவடி.. 

பழநி தைப்பூசத்தையொட்டி பாதயாத்திரையாக நகரத்தார் பழநி முருகனுக்கு காவடி எடுத்து சுமார் 400 வருடத்திற்கும் மேலாக சென்று வருகின்றனர். இதையொட்டி கடந்த ஜனவரி மாதம் 30ந் தேதியன்று தேவகோட்டை நகரப் பள்ளிக்கூடத்தில் காவடி கட்டு வைத்து பூஜை (அரஹரா) செய்யப்பட்டது. அதைதொடர்ந்து மறுநாள் காவடி குழுவினர்   நகர்வலம் வந்து சிலம்பணி பிள்ளையார் கோயிலில் தங்கினர். அதைதொடர்ந்து பிப்ரவரி 1ந் தேதியன்று காலையில் காவடியும், பாதயாத்ரீயர்களும் புறப்பட்டனர் . 

pazhani

பிறகு  மாரியம்மன் கோயில் அருகிலுள்ள பஜனை மடத்தில் பானக பூஜை நடந்தது. இதை தொடர்ந்து அங்கிருந்து புறப்பட்டு பெரியகடை வீதி மூன்றுலாந்தர், பேருந்து நிலையம் வழியாக பழனியை நோக்கி சென்றனர். அப்போது முருகனுக்கு  பூஜை செய்யும் வேலை  கொண்டு சென்றனர். இதை பக்தர்கள் வணங்கி அதற்கு பன்னீர், எலுமிச்சம் பழம், மலர்கள் போன்றவைகளை செலுத்தி வழிபட்டனர்.

pazhani

அதைதொடர்ந்து முருகன் புகழ்போற்றும் பாடல்களை பாடி பக்தர்கள் காவடியை சுமந்து சென்றனர். இதன் சிறப்பு பற்றி பக்தர்கள் கூறிய போது. இவ்வாறாக காவடி எடுத்துச் செல்லும் நகரத்தார் குழுவினர் தைப்பூசத்தையொட்டி பழநிக்கு சென்று பாரம்பரிய முறைப்படி தங்கவேண்டிய இடங்களில் தங்கி பூஜைகளை நிறைவேற்றி, வரும் பிப்ரவரி 10ந் தேதி அங்கு காவடியை செலுத்துவர்.

pazhani

இதைதொடர்ந்து தைப்பூசத்தையொட்டி பாதயாத்திரையாக கொண்டு செல்லப்பட்ட காவடிகள் திரும்பவும் ஊர் திரும்பும் போது ஆங்காங்கே பூஜைகள் செய்து , மீண்டும் 19ந் தேதி தேவகோட்டையை சென்று சேரும். இவ்வாறு ஜனவரி 30ந் தேதி தொடங்கி பிப்ரவரி 19ந்தேதி வரை சம்பிரதாயங்களின்படி பாதயாத்திரை காவடி பயணம் இருக்கும்  என்றனர்.