பக்தருக்கு நேரில் காட்சியளித்த சாய் பாபா!

 

பக்தருக்கு நேரில் காட்சியளித்த சாய் பாபா!

இதைச் சிறிதும் பொருட்படுத்தாத நானா, ஒரு பாறையில் அமர்ந்தவாறு தன் மனதுக்குள் பாபாவைப் வேண்டினார்.

ஒருமுறை பாபாவின் பக்தரான மாவட்ட துணை அதிகாரி நானா தன்னுடன் பணிபுரியும் அதிகாரியோடு இணைந்து சீரடியிலிருந்து சுமார் நாற்பது மைல் தொலைவிலிருக்கும் அரிச்சந்திர மலைக்குச் சென்றார். அங்கு பாதி மலையை கடந்த நிலையில் இருவருக்கும் தண்ணீர் தாகம் ஏற்பட்டது. ஆனால்  எங்கும் நீர் கிடைக்கவில்லை. அப்போது நானா, தன்னுடன் வந்த அதிகாரியிடம், ‘நான் புறப்படுவதற்கு முன்னர் பாபாவிடம் விடைபெறாமல் வந்ததால்தான் எனக்கு இந்த நிலை வந்தது’ என்று கூறி வருந்தினார். இதை கேட்ட அந்த அதிகாரி நானாவை பார்த்து கிண்டலாகச் சிரித்தார்.  இதைச் சிறிதும் பொருட்படுத்தாத நானா, ஒரு பாறையில் அமர்ந்தவாறு தன் மனதுக்குள் பாபாவைப் வேண்டினார்.

baba

அப்போது சீரடி துவாரகாமாயியில் இருந்த பாபா அங்கிருந்தவர்களிடம், ‘நானா, அரிச்சந்திர மலையில் தண்ணீரின்றி தவிக்கிறான்…’ என்று கூறி விட்டு பின்னர் தன் வழக்கமான உரையாடலைத் தொடர்ந்தார். அங்கிருந்தவர்களுக்குப் பாபா சொல்வது புரியவில்லை.

baba

அதேசமயம் அரிச்சந்திர மலையிலிருந்த நானா ஒருவேடனை சந்தித்தார். இங்கு தண்ணீர் கிடைக்குமா என்று கேட்டபோது நீங்கள் அமர்ந்திருக்கும் பாறையின் கீழ்  தண்ணீர் உள்ளது என்று கூறினார். அவர்களும் பாறையை நகர்த்தி தண்ணீர் பருகினார்கள். ஆனால்  அங்கு வேடன் இல்லை. 

baba

இதன்பிறகு சீரடியை அடைந்த நானா பாபாவை வந்து சந்தித்தார். அப்போது பாபா நானா உனக்கு தாகம் ஏற்பட்டவுடன் தண்ணீர் அளித்தேனே… அருந்தினாயா?’’என்று கேட்டார். இதை கேட்க நானா பாபாவின் காலை பற்றிக்கொண்டு கண்கலங்கினார். 

பாபாவை நாம் முழுமையாக நம்பி அவரிடம் சரணாகதியானோமேயானால் பாபா உரிய நேரத்தில் நிச்சயம் நமக்கு உதவி செய்வார் என்பது இந்த கதை மூலம் தெளிவாகிறது.