பக்கத்து வீட்டு பழைய பகை -சாகடிக்கப்பட்ட சாப்ட்வேர் என்ஜினீயர் -பொருளையும் ஆட்டைய போட்ட அண்டைவீட்டுக்காரர் …

பக்கத்து வீட்டு பழைய பகை -சாகடிக்கப்பட்ட சாப்ட்வேர் என்ஜினீயர் -பொருளையும் ஆட்டைய போட்ட அண்டைவீட்டுக்காரர் …

மூன்று மாதங்களுக்கு முன்பு  ஒரு மென்பொருள் பொறியாளரைக் கொன்ற வழக்கில் நான்கு பேர் கைது செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். மனைவியிடமிருந்து பிரிந்து சுந்தரபுரத்தில் வசித்து வந்த சக்திவேல் என்ற சாப்ட்வேர் என்ஜினீயர், பழைய  பகை காரணமாக அண்டை வீட்டாரால் அடித்து கொல்லப்பட்டார் என்று போலீசார் தெரிவித்தனர்.

இறந்தவரின்  உறவினர் டிசம்பர் 22 ம் தேதி அவரது வீட்டிற்குச் சென்றபோது , ஒரு அறையில் முற்றிலும் எரிந்த உடலைக் கண்டதும் இந்த விஷயம் வெளிச்சத்துக்கு வந்தது.
தகவலின் பேரில், குற்றவாளிகளைக் கைது செய்ய போலிசார் நான்கு சிறப்புக் குழுவை அமைத்தனர், அவர்களின்  விசாரணையில்  அவரது அண்டை வீட்டான ஆனந்த்குமாரை சனிக்கிழமை இரவு கைது செய்தனர் 
விசாரணையில் ஆனந்த்குமார் அக்டோபர் 3 ஆம் தேதி சக்திவேலின் வீட்டிற்குச் சென்று மரக்கட்டையால் அடித்து கொலை செய்ததாக தெரியவந்துள்ளது.
பின்னர் அவர் தனது மூன்று நண்பர்கள் உதவியுடன் உடலை எரித்ததோடு, தங்கநகைகள் ,விலையுயர்ந்த  பொருட்கள், இரண்டு டிவி பெட்டிகள் மற்றும் ஒரு மோட்டார் சைக்கிள் ஆகியவற்றைக் கொண்டு சென்றனர் .
குற்றம் சாட்டப்பட்ட 4 பேரும் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.