பகுஜன் சமாஜ் கட்சி – சமாஜ்வாதி கட்சி கூட்டணியை மதிக்கிறேன்:ராகுல் காந்தி கருத்து!

 

பகுஜன் சமாஜ் கட்சி –  சமாஜ்வாதி கட்சி கூட்டணியை மதிக்கிறேன்:ராகுல் காந்தி கருத்து!

மக்களவைத் தேர்தலில்  உத்தரபிரதேசத்தின் எதிரெதிர் துருவங்களான பகுஜன் சமாஜ் கட்சியும், சமாஜ்வாதி கட்சியும் கூட்டணிக்காக கைகோர்த்துள்ளது குறித்து ராகுல் காந்தி கருத்து கூறியுள்ளார்.

துபாய்: மக்களவைத் தேர்தலில்  உத்தரபிரதேசத்தின் எதிரெதிர் துருவங்களான பகுஜன் சமாஜ் கட்சியும், சமாஜ்வாதி கட்சியும் கூட்டணிக்காக கைகோர்த்துள்ளது குறித்து ராகுல் காந்தி கருத்து கூறியுள்ளார்.

mayavathi

மத்தியில் ஆளுங்கட்சியாக உள்ள பாஜக-வுக்கு மாற்றாக வலுவான மாற்று அணியாக உருவாக எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒன்று சேர முயற்சித்து வருகின்றன. இந்த வகையில் மக்களவைத் தேர்தலுக்கு முன்னோட்டமாக இதுவரையில் எதிரெதிர் துருவங்களாக இருந்த மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியும் அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி கட்சியும் தங்கள் கூட்டணியை உறுதி செய்துள்ளன.அதன்படி உத்தரபிரதேசத்தில் மக்களவைத் தேர்தலில் இந்தக் கூட்டணியினர் 38 தொகுதிகளில் போட்டியிடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் உள்ள இரண்டு தொகுதிகளை அடுத்ததாகக் கூட்டணியில் இணையவிருக்கும் கட்சிக்குத் தரப்படும் என்றும் அறிவித்துள்ளனர். இதனால் காங்கிரஸ் கட்சி தனித்து விடப்பட்டுள்ளது.

rahul

இந்நிலையில் துபாயில் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்ற ராகுல், ‘பகுஜன் சமாஜ் கட்சியும், சமாஜ்வாதி கட்சியும் கூட்டணி அமைப்பது என்று எடுத்துள்ள முடிவைத் தான் மதிக்கிறேன். அதேநேரம், உத்தரப்பிரதேசத்திற்கு காங்கிரஸ் மகத்தான சேவை அளிக்க வேண்டியுள்ளது. அதனால் கட்சியை வலுப்படுத்தி முழுவேகத்துடன் மக்களவை தேர்தலை எதிர்கொள்வோம்.  உத்தரபிரதேச மாநிலத்தில் அரசு அதிகாரிகள் மற்றும் முக்கிய அமைப்புகளின் எதிர்ப்பை ஆர்எஸ்எஸ் சம்பாதித்துள்ளது. அதனால் மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெறுவது உறுதியாகியுள்ளது’ என்று நம்பிக்கை தெரிவித்தார்.