பகவத்கீதையை பாடத்திட்டமாக கொண்டு வந்ததில் தவறு ஏதும் இல்லை – டி.டி.வி.தினகரன்

 

பகவத்கீதையை பாடத்திட்டமாக கொண்டு வந்ததில் தவறு ஏதும் இல்லை – டி.டி.வி.தினகரன்

தேனி மாவட்ட அ.ம.மு .க நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் டி.டி.வி தினகரன் தலைமையில் தேனியில் நடைபெற்றது.

கூட்டத்தில் கலந்துகொண்டபின் செய்தியாளர்களை சந்தித்த அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், “என் பின்னால் வருபவர்களை உள்ளாட்சி பிரதிநிதிகளாகவும், சட்டமன்ற உறுப்பினராகவும், அமைச்சராகவும், ஏன் முதல் அமைச்சராகவும் ஆக்க பாடுபடுவேன். தற்போதைய காலகட்டத்தில் கட்சியை விட்டு சென்ற போதிலும் வருத்தபடவும் இல்லை அசரவும் மாட்டேன். அதிமுகவை எப்படியாவது மீட்டு எடுப்போம். அதிமுகவை மீட்டு எடுக்க ஜெயலலிதா வழியில் பாடுபடுவோம். யாருமே கட்சியை விட்டு போக கூடாது என தான் கட்சி தலைமை விரும்பும், ஆனால் அவர்களின் சுய விருப்பத்துடன் சென்றால் அதனை நாங்கள் தடுக்க முடியாது. 

ttv

எங்கள் கட்சிக்காக யாரும் நீலிக்கண்ணீர் வடிக்க வேண்டாம். கட்சியை பதிவு செய்து, உறுதியான சின்னம் பெற்ற பின்னர் அனைத்து தேர்தலிலும் போட்டியிடும். பகவத்கீதையை பாடத்திட்டமாக கொண்டு வந்ததில் தவறு ஏதும் இல்லை ” என்று கூறினார்.