‘நோ சூடு, நோ சொரணை, நோ பாதர்…’ ஆண் சீடரின் பாலியல் குற்றச்சாட்டுக்கு நித்தியானந்தா பதில்!

 

‘நோ சூடு, நோ சொரணை, நோ பாதர்…’ ஆண்  சீடரின் பாலியல் குற்றச்சாட்டுக்கு நித்தியானந்தா பதில்!

கொடுங்கள் திட்டுபவர்களுக்கு ஆசி வழங்குங்கள். அவர்கள் பேசுவதை காதில் வாங்கி கொள்ளாதீர்கள்’ என்றார். 

நித்தியானந்தாவைத் தேடுவதில் மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது.  வரும் 18-ஆம் தேதிக்குள் நித்தியானந்தா இருக்குமிடத்தைக் கண்டறிந்து அறிக்கை தாக்கல் செய்ய பெங்களூரு காவல்துறைக்குக் கர்நாடக உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ttn

இந்நிலையில் உலகில் எங்கோ இருந்தபடி நித்தியானந்தா தினசரி உபதேசங்களைத்  தினமும்  யூட்யூப் மற்றும் பேஸ்புக்  போன்ற தளங்களில் சத்சங்கத்தில்  பேசி வரும் நித்தியானந்தா தமிழகத்தைச் சேர்ந்த விஜயகுமார்  கூறிய பாலியல் குற்றச்சாட்டுக்கு எதிராக முதன் முறையாக வாய் திறந்துள்ளார். அதில், ‘தன் மீதான பாலியல் குற்றச்சாட்டுக்கு நிறைய விஷயங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. நோ சூடு, நோ சொரணை, நோ பாதர்…யார் என்ன சொன்னாலும் என் சீடர்கள் அன்பை மட்டுமே அவர்களுக்கு கொடுங்கள். திட்டுபவர்களுக்கு ஆசி வழங்குங்கள். அவர்கள் பேசுவதை காதில் வாங்கி கொள்ளாதீர்கள்’ என்றார். 

ttn

தொடர்ந்து பேசியுள்ள அவர்,  ஹீரோக்கள் பஞ்ச் டயலாக் பேச தேவையான ரசிகர்கள் இருக்க வேண்டும். அப்போது தான் கைதட்டி, விசில் அடித்து கொண்டாடுவார்கள்.  நான் பேசுவது தேவைக்கேற்ப அல்ல. மற்றவர்களின் விருப்பத்திற்காக நான் பேசவில்லை. சொல்லப்படுகிற சத்தியத்தின் சக்தியினால் பேசுகிறேன். என்னை பார்த்து  பயந்தாங்கோலிகள் ஓடி ஒளிந்து கொண்டிருக்கிறார்கள். வெற்றி பெற்றவருக்கு வரலாறு உண்டு, தோல்வி பெற்றவர்களுக்கும் வரலாறு உண்டு. ஆனால்  பார்த்து கொண்டிருந்த பைத்தியங்களுக்கு வரலாறு இல்லை. வாருங்கள் வாருங்கள்  இந்த ஞான போரில்…வென்றாலும் கைலாசம் உண்டு. தோற்றாலும் கைலாசம் உண்டு. பொறுத்தது போதும் பொங்கி எழு’ என்றார்.