நோ எலிமினேஷன்: இரண்டு வாரத்திற்கு வனிதாவை காப்பாற்றிய பிக் பாஸ் 

 

நோ எலிமினேஷன்: இரண்டு வாரத்திற்கு வனிதாவை காப்பாற்றிய பிக் பாஸ் 

வனிதாவை காப்பாற்ற இந்த வாரம் எலிமினேஷன் கிடையாது என்று பிக் பாஸ் அறிவித்துள்ளார். 

சென்னை: வனிதாவை காப்பாற்ற இந்த வாரம் எலிமினேஷன் கிடையாது என்று பிக் பாஸ் அறிவித்துள்ளார். 

பிக் பாஸ் சீசன் 3 தொடங்கி 64 நாட்களை எட்டியுள்ளது. 16 போட்டியாளர்களுடன் தொடங்கிய இதிலிருந்து இதுவரை பாத்திமா பாபு,வனிதா, மோகன் வைத்யா, மீரா, சாக்ஷி, அபிராமி, சரவணன் மற்றும் மதுமிதா  ஆகியோர் வெளியேறியுள்ளனர். 

இதில் வைல்ட் கார்ட் எண்ட்ரியாக நுழைந்த கஸ்தூரி நேற்று மக்களிடம் குறைவான வாக்குகளைப் பெற்று வெளியேறினார். 17 நாட்கள் மட்டுமே அவர் வீட்டிற்குள் செலவு செய்ததால் அவருக்கு சீக்ரெட் ரூம் செல்லும்  வாய்ப்பு கிடைத்தது. ஆனால் அங்கே சென்றாலும் தான் எதுவும் செய்ய போவதில்லை என்று அந்த வாய்ப்பை நிராகரித்துவிட்டார். 

இந்த நிலையில் இதில் மற்றொரு வைல்ட் கார்டு எண்ட்ரியாக வனிதா மீண்டும் உள்ளே நுழைந்துள்ளார். வந்த முதல் நாளே தனது ராஜதந்திர வேலையைக் காட்டி வீட்டிற்குள் பூகம்பத்தைக் கிளப்பினார். அதனால் அவரை மீண்டும் வெளியேற்ற வேண்டும் என்று மக்கள் குரல் கொடுத்து வருகின்றனர்.

vanitha

ஆனால் அதையெல்லாம் கண்டு கொள்ளாத விஜய் டிவி அவர் நிகழ்ச்சியைச் சுவாரசியமாகக் கொண்டு செல்வதால் அவரை காப்பாற்றி வருகிறது. அந்த வகையில் இந்த முறை இந்த வாரமும் அவரை காப்பாற்றி விட வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த வாரம் எலிமினேஷன் இல்லை என அறிவித்து விட்டார். அதனால் இந்த வாரம் மற்றும் அடுத்த வார இறுதி வரை வனிதாவின் ஆட்டத்தைப் பார்த்துத் தான் ஆக வேண்டும்.