நோய் எதிர்ப்பு சக்தி குறையும்… கொரோனா வைரஸ் பாதிப்பதற்கான வாய்ப்பு அதிகரிக்கும்…. குடிமகன்களுக்கு மருத்துவர்கள் எச்சரிக்கை

 

நோய் எதிர்ப்பு சக்தி குறையும்… கொரோனா வைரஸ் பாதிப்பதற்கான வாய்ப்பு அதிகரிக்கும்….  குடிமகன்களுக்கு மருத்துவர்கள் எச்சரிக்கை

மது குடிப்பதால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறையும், கொரோனா வைரஸ் பாதிப்பதற்கான வாய்ப்பை அதிகரிக்கும் என குடிமகன்களுக்கு மருத்துவர்கள் எச்சரிக்கை செய்துள்ளனர்.

லாக்டவுன் காரணமாக நாடு முழுவதுமாக கடந்த 3ம் தேதி வரையிலான 40 நாட்கள் மதுகடைகள் மூடப்பட்டு இருந்தன. இதனால் குடிமகன்கள் மது குடிக்க முடியாமல் பரிதவித்து வந்தனர். இந்நிலையில் கடந்த 4ம் தேதி முதல் விதிமுறைகளை பின்பற்றி மது கடைகளை திறந்து கொள்ள மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி அளித்தது. இதனையடுத்து பல மாநிலங்களில் மது கடைகள் திறக்கப்பட்டன. மது கடைகள் திறப்பதற்கு முன்பே நீண்ட வரிசையில் மது பிரியர்கள் கால் கடுக்க நின்று மதுவை வாங்கி சென்றனர்.

மது

இந்நிலையில் மது குடிப்பதால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறையும், கொரோனா வைரஸ் பாதிப்பதற்கான வாய்ப்பை அதிகரிக்கும் என மது குடிப்பவர்களுக்கு மருத்துவர்கள் எச்சரிக்கை செய்துள்ளனர். இது தொடர்பாக பி.எல்.கே. மருத்துவமனையின் மூத்த மனநல ஆலோசகர் டாக்டர் மனிஷ் ஜெயின் இது தொடர்பாக கூறியதாவது: கொரோனா வைரஸால் உருவான சூழ்நிலைகளால் ஏற்பட்ட மன அழுத்தத்தை போக்க மது குடிப்பது நல்ல யோசனையல்ல.

யோகா

நாம் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ மது குடிக்கும்போது அது நமது அழுத்தத்தை அதிகரிக்கும். மது குறுகிய மற்றும் நீண்ட கால விளைவுகளை கொண்டது. உடலின் ஒவ்வொரு உறுப்பையும் பாதிக்கும். மது குடிப்பது குறிப்பாக அதிகளவு மது குடிப்பது நோய் எதிர்ப்பு சக்தியை பலகீனப்படுத்தும் மற்றும் தொற்று நோயை சமாளிக்கும் உடலின் திறனை குறைக்கும். மது அருந்தும் பழக்கம் உள்ளவர்கள் கொரோனா வைரஸ் தாக்கும் அபாயத்தில் உள்ளனர். இவ்வாறு அவர் தெரிவித்தார். மற்றொரு மனநல மருத்துவர் ராஜீவ் மேத்தா கூறுகையில், அழுத்தததை குறைக்க மது உதவாது. மது அழுத்தத்தை கொல்லாது என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். அது உங்களை கொல்லும். அழுத்தத்தை குறைக்க யோகா, உடற்பயிற்சி மற்றும் புத்தகம் படியுங்க. உங்களால் 45 நாட்கள் மது இல்லாமல் இருக்க முடிகிறது என்றால் நீண்ட காலத்துக்கு மது குடிக்காமல் இருக்கு முடியும் என்பதை மக்கள் அவசியம் புரிந்து கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.