நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் அறுகம்புல் கஷாயம்

 

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் அறுகம்புல் கஷாயம்

மழைக்காலங்களில் எளிதாக தொற்று நோய்கள் பரவுவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருக்கின்றன. குழந்தைகளுக்கும், வீட்டில் உள்ள பெரியவர்களுக்கும் இந்த காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது அவசியமானதாகும்.

மழைக்காலங்களில் எளிதாக தொற்று நோய்கள் பரவுவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருக்கின்றன. குழந்தைகளுக்கும், வீட்டில் உள்ள பெரியவர்களுக்கும் இந்த காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது அவசியமானதாகும். அதனால், மழைக்காலங்களில் அவசியம் எல்லோரும் அருகம்புல் கஷாயம் செய்து பருகலாம்.

Arukampul

தேவையானவை:
அறுகம்புல் – ஒரு கைப்பிடி,
மிளகு – 10
செய்முறை:
அறுகம்புல்லை நல்ல தண்ணீரில் நன்றாக அலசிக் கொள்ளுங்கள். அதன் பிறகு அருகம்புல்லையும், மிளகையும் இடித்து, இந்த கலவையில் தண்ணீர் விட்டு, எவ்வளவு தண்ணீர் ஊற்றுகிறோமோ அதில் நான்கில் ஒரு பங்காக தண்ணீர் வற்றும் வரையில் நன்றாக காய்ச்சியதும், இந்த நீரை வடிகட்டி வைத்துக் குடிக்கலாம்.  இந்தக் கஷாயத்தை உணவுக்கு முன்பாக  குடித்தால் அதிக பலன்கள் கிடைக்கும்.