நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க இந்த மாத்திரைகளை எடுத்துக்கொள்ளுங்கள்! – சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள அறிவுரை

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க இந்த மாத்திரைகளை எடுத்துக்கொள்ளுங்கள்! – சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள அறிவுரை

கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் முதல் நிலை மருத்துவர்கள், மருத்துவப் பணியாளர்கள், சுகாதாரப் பணியாளர்கள் என அனைவரும் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்த உதவும் மாத்திரை மற்றும் நிலவேம்பு குடிநீர் உள்ளிட்டவற்றை கட்டாயம் எடுத்துக்கொள்ள வேண்டும் என்று தமிழக சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது.

தமிழக சுகாதாரத் துறை செயலாளர் பீலா ராஜேஷ் வெளியிட்டுள்ள கடிதத்தில், “தற்போதைய சூழலில் கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்கும் முதல்நிலை ஊழியர்கள் தங்களின் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்திக்கொள்வது அவசியம். கொரோனா பாதிப்பு பகுதியில் உள்ள, கொரோனா தாக்குதல் அச்சம் அதிகம் உள்ளவர்கள் என காவல் துறையினர், மருத்துவப் பணியாளர்கள் மற்றும் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள, கொரோனா ஒழிப்பு பணியாளர்கள் அனைவரும் பின்வரும் மாத்திரைகள் மற்றும் மூலிகை மருந்துகளை தினமும் எடுத்துக்கொள்ள பரிந்துரைக்கிறேன்.

beela

சிங்க் மாத்திரை 150 மை.கி தினமும் ஒன்று என்று 10 நாளைக்கு, வைட்டமின் சி அல்லது மல்டி வைட்டமின் மாத்திரை ஒன்று என 10 நாளைக்கு, நிலவேம்பு குடிநீர் அல்லது கபசுர குடிநீர் மூலிகை மருந்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
நிலவேம்பு கஷாயம் அல்லது கபசுர குடிநீர் ஒருவருக்கு தயாரிக்கும் முறை, 240 மிலி தண்ணீரில் 5 கிராம் அளவுக்கு நிலவேம்பு குடிநீர் அல்லது கபசுர குடிநீர் மூலிகை பொடியை போட்டு 60 மிலி ஆகும் அளவுக்கு நன்கு கொதிக்கவிட வேண்டும். இதை தயாரித்த மூன்று மணி நேரத்தில் அருந்த வேண்டும். இதை தினமும் காலை வேலையில் சாப்பிடுவதற்கு முன்பு ஒரு மாதத்துக்கு அருந்த வேண்டும். பெரியவர்கள் 60 மி.லி-யும் குழந்தைகள் 30 மி.லி-யும் எடுத்துக்கொள்ளலாம். 

beela rajesh

மேலே குறிப்பிட்ட மாத்திரை மற்றும் மூலிகை மருந்து கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் முதல்நிலை பணியாளர்களின் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும். இது கோவிட்19 நோய்த் தொற்றில் இருந்து பாதுகாக்கவும் வேலைத் திறனை மேம்படுத்தவும் உதவும். இதை ஒவ்வொருவரும் பின்பற்றும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.