நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் முருங்கைக் கீரை!

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் முருங்கைக் கீரை!

ஒரு காலத்தில் வீட்டுக்கு வீடு முருங்கை மரங்கள் இருக்கும். ஆனால், நகர்ப்புற ஃபிளாட் வாழ்க்கையில் முருங்கை மரம் எல்லாம் நினைத்து கூட பார்க்க முடியாது. அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள், அமினோ அமலங்கள் நிறைந்த முருங்கையின் கீரை, பிசின், காய் என அனைத்துமே உடலுக்கு ஆரோக்கியம் தரக்கூடியதுதான்.

முருங்கைக் கீரையில் கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து, வைட்டமின் ஏ, பி மற்றும் சி, நார்ச்சத்து நிறைவாக உள்ளன.

drumtick-leaves-8

  • வைட்டமின் ஏ நிறைய உள்ளதால் பார்வைத் திறனுக்கு நல்லது. 
  • முருங்கைக் கீரை, எலும்பு, பற்கள் வலுப்பெறும். ரத்தசோகையைக் கட்டுப்படுத்தும். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். ஆண்மையைப் பெருக்கும்.
  • வயிற்றுப் புண்களை ஆற்றும் சக்தி முருங்கைக் கீரையில் உள்ளது. உடலின் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும்.
  • உடல் வெப்பத்தைத் தணிக்கும். உடல் சூட்டினால் ஏற்படும் தலைவலியைத் தடுக்கும்.
  • கை, கால் வலி, மூட்டுவலியைக் குணமாக்கும். பார்வைத்திறனை மேம்படுத்தும்.
  • செரிமானக் கோளாறு, மந்தத்தன்மை ஆகியவற்றைக் குறைக்கும். 

drumstick-76

முருங்கைக் கீரை செரிமானம் ஆக நேரம் ஆகும். எனவே, இரவு நேரத்தில் முருங்கைக் கீரையை சேர்த்துக்கொள்ள வேண்டாம். முருங்கைக்கீரைச் சாற்றைத் தலைக்குத் தேய்த்து குளித்துவந்தால், பொடுகுப் பிரச்னை தீரும்.