நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் துத்தநாகம் நிறைந்த நான்கு உணவுகள்!

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் துத்தநாகம் நிறைந்த நான்கு உணவுகள்!

நோய் எதிர்ப்பு சக்திக்கு எப்படி வைட்டமின் சி முக்கியமோ, அதேபோல் தாதுஉப்பில் துத்தநாகமும் அவசியம். இந்த துத்தநாகம்தான் நோய் எதிர்ப்பு சக்தியில் முக்கியமான அணுக்களான டி லிம்போசைட் அணுக்களைத் தூண்டுகிறது. இது நம் உடலில் நுழையும் கிருமிகளை எதிர்த்துப் போராடத் தூண்டுகிறது. இது சிறந்த ஆன்டிஆக்சிடன்டும் கூட.

கொரோனா வைரஸ் கிருமியை அழிக்கும் மருந்தாக துத்தநாகம் செயல்படாது. ஆனால், தொடர்ந்து இந்த ஊட்டச்சத்தை நாம் எடுத்துக்கொள்ளும்போது நோய் எதிர்ப்பு சக்தி மேம்படும், கொரோனா உள்ளிட்ட எந்த ஒரு கிருமி உடலுக்குள் நுழைந்தாலும் அதை அழிக்கும் ஆற்றல் நம்முடைய நோய் எதிர்ப்பு மண்டலத்துக்கு கிடைக்கும்.
1. இறால், நண்டு:
ஓடு உள்ள கடல் உணவுகளில் துத்தநாகம் நிறைவாக உள்ளது. நம் ஊரில் சிப்பியை சாப்பிடுவது இல்லை. அதிலும் துத்தநாகம் நிறைவாக உள்ளது என்று ஆய்வுகள் கூறுகின்றன. அதற்கு இணையான அளவு இறால், நண்டுகளிலும் உள்ளதாக கூறப்படுகிறது. மீன்களிலும் துத்தநாக சத்து உள்ளது. எனவே, கடல் உணவை அதிகம் எடுத்துக்கொள்ளலாம்.

prawn-and-lobster

இறைச்சி:
கோழி இறைச்சியில் துத்தநாகம் உள்ளது. இதுதவிர ரெட் மீட் என்று சொல்லப்படும் மாட்டிறைச்சி, பன்றி இறைச்சியிலும் துத்தநாகம் உள்ளது. கோழி இறைச்சியை சாப்பிடும்போது தோலை நீக்கிவிட்டு சமையலில் பயன்படுத்துங்கள். முட்டையிலும் துத்தநாகம் உள்ளது. 

meat 88

காளான்:
அசைவம் சாப்பிடாதவர்களுக்கு துத்தநாகம் கிடைக்காதா என்று கேட்பது தெரிகிறது. காளான் உள்ளிட்ட பல உணவுகளில் துத்தநாகம் உள்ளது. ஆனால், அளவுதான் இறைச்சியில் உள்ள அளவுக்கு கிடையாது. காளான், கீரைகள், பூண்டில் கூட துத்தநாகம் உள்ளது. இவற்றையும் தினசரி உணவில் சேர்த்துக்கொள்ளலாம்.

mushroom

பயிறு, விதைகள்:
பீன்ஸ், கருப்பு பீன்ஸ், கொண்டைக்கடலை, பூசனி விதை, சூரியகாந்தி விதையிலும் துத்தநாகம் உள்ளது. ஒரு அவுன்ஸ் பூசனி விதையில் ஒரு நாளைக்குத் தேவையான துத்தநாகத்தில் 19 சதவிகிதம் உள்ளதாம். ஆரோக்கியமான சரிவிகித உணவை எடுத்து வருவதன் மூலம் நோய் சக்தியை அதிகரிக்கலாம்.

lentils