நோய்களை விரட்டியடிக்கும் கோவில் பிரசாதம்! 

 

நோய்களை விரட்டியடிக்கும் கோவில் பிரசாதம்! 

தமிழகத்தின் ஒவ்வொரு கோயிலுக்கும் தனித்தனியே பிரசித்தி பெற்ற பிரசாதம் என்று இருக்கிறது. திருப்பதியில் லட்டு உலகப் புகழ் பெற்ற பிரசாதமாக இருப்பதைப் போல பழனியில் பஞ்சாமிர்தம். உண்மையில் வெறும் சுவைக்காக மட்டுமோ அல்லது பக்தர்களை ஈர்ப்பதற்காகவே இப்படி ஆலயங்களில் பிரசாதத்தை தரும் வழக்கம் வரவில்லை.

தமிழகத்தின் ஒவ்வொரு கோயிலுக்கும் தனித்தனியே பிரசித்தி பெற்ற பிரசாதம் என்று இருக்கிறது. திருப்பதியில் லட்டு உலகப் புகழ் பெற்ற பிரசாதமாக இருப்பதைப் போல பழனியில் பஞ்சாமிர்தம். உண்மையில் வெறும் சுவைக்காக மட்டுமோ அல்லது பக்தர்களை ஈர்ப்பதற்காகவே இப்படி ஆலயங்களில் பிரசாதத்தை தரும் வழக்கம் வரவில்லை. கூட்டம் அதிகமாக காணப்படும் ஆலயங்களில் எளிதில் தொற்றக்கூடிய நோய் கிருமிகளை அழிக்கும் ஆற்றல் இந்த பிரசாதங்களுக்கு உண்டு. உதாரணத்திற்கு பழனி பஞ்சாமிர்தத்தை தினமும் காலையிலும் மாலையிலும் சிறிதளவு உட்கொண்டால் போதும். உடலின் எதிர்ப்பு சக்தி அதிகரித்து நோய் தொற்றுக்களை சமாளிக்கும் அளவு உடல் ஆரோக்கியப்படும். 

prasatham

இதனை வெறும் பூஜைப் பொருளாக மட்டுமே பார்க்கக் கூடாது. சித்தர் போகர் அருளியது பழனி பஞ்சாமிர்தம்.  மழைக்காலங்களில் ஏற்படும் சளி, இருமல், காய்ச்சல் ஆகியவைகளில் இருந்து மிக எளிமையாக சமாளிக்கும் முறையை நம் முன்னோர்கள் கடைப்பிடித்து வந்தார்கள். பழனியில் நவபாஷான சிலையை நிறுவிய போகர் ஒரு மிகச்சிறந்த அருமருந்தினை நமக்கு அளித்துள்ளார். 
மலை வாழை, சுத்தமான நெய், நல்ல தேன் ஆகியவற்றால் செய்யப்படும் பஞ்சாமிர்தம் தான் பழனி பஞ்சாமிர்தம். இந்த பஞ்சாமிர்தத்தை தினமும் காலையிலும் மாலையிலும் சிறிதளவு பஞ்சாமிர்தம் எடுத்துக் கொண்டால் போதும், உடலின் எதிர்ப்பு சக்தி அதிகரித்து நோய் தொற்றுக்களை சமாளிக்கும் அளவு உடல் ஆரோக்கியப்படும். உடல் சூட்டினைக் கட்டுக்குள் கொண்டு வரும் ஆற்றல் நம் பாரம்பரிய பஞ்சாமிர்தத்திற்கு உண்டு.

kovil

இன்றும் பழனியைச் சுற்றியுள்ள கிராமங்களில் பங்குனி மாதத்தில் பங்குனி உத்திர பெருவிழா அன்று பஞ்சாமிர்தம் செய்து ஊரில் உள்ள அனைவருக்கும் வழங்கும் பழக்கம் இருந்து வருகிறது. இது பல்லாயிரம் ஆண்டுகளாக கடைப்பிடித்து வரும் பாரம்பரியமாகவே இருந்து வருகிறது. ஆனால் சுத்தமான மலை வாழைப்பழத்தினால் செய்த பஞ்சாமிர்தமாக இருக்க வேண்டும்.  தமிழர் பண்பாட்டில் எத்தனையோ உணவு பொருட்கள் இருந்தாலும் இதை மட்டும் தான் அமிர்தம் என்று சொல்லி வழங்கி வருகிறோம். இதன் பெயரில் இருந்தே இதன் மகத்துவத்தை உணருங்கள்.