நோயாளிகளை தொடுவதன் மூலம் வாய், மூக்கு வழியாக கொரோனா பரவுகிறது: ராதாகிருஷ்ணன் தகவல்

 

நோயாளிகளை தொடுவதன் மூலம் வாய், மூக்கு வழியாக கொரோனா பரவுகிறது: ராதாகிருஷ்ணன் தகவல்

கொரோனா தடுப்பு சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். 

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 10,000ஐ நெருங்கிக் கொண்டே வரும் நிலையில், சென்னையில் மட்டுமே 5,000க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கு ஒரு முக்கிய காரணம் கோயம்பேடு சந்தையில் கொரோனா பரவியது தான் அங்கு பரவியதால் சென்னை மட்டும் இல்லாமல் பல மாவட்டங்களிலும் பாதிப்பு அதிகமாகியுள்ளது. இந்நிலையில் கொரோனா தடுப்பு சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். 

ttn

அப்போது பேசிய அவர், சென்னையில் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ள ராயபுரத்தில் கொரோனா பாதிப்பை குறைக்க தனித்திட்டம் வகுக்கப்பட்டுள்ளதாகவும் மக்களிடம் இருந்து மிகுந்த ஒத்துழைப்பை எதிர்பார்க்கிறோம் என்றும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களை சந்திப்பதால் 70% நோய்த் தொற்று பரவுவதாகவும் கூறினார்.

தொடர்ந்து நோய்த் தொற்று இருப்பவர்களை தொடுவதால் வாய்,மூக்கு வழியாக கொரோனா பரவுகிறது என்றும் இதுவரை பாதிக்கப்பட்டுள்ள 80% பேருக்கு அறிகுறி ஏதும் இல்லை என்றும் சென்னையில் உள்ள 70,000க்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது என்றும் கொரோனாவை கட்டுப்படுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது என்றும் கூறினார்.