‘நோட்டா’ படத்துக்கு திடீர் சிக்கல்: தடைக் கோரி தேர்தல் ஆணையத்தில் புகார்!

 

‘நோட்டா’ படத்துக்கு திடீர் சிக்கல்: தடைக் கோரி தேர்தல் ஆணையத்தில் புகார்!

‘அர்ஜுன் ரெட்டி’ நாயகன் விஜய் தேவரகொண்டா நடித்துள்ள ‘நோட்டா’ படத்திற்கு தடைக் கோரி தேர்தல் ஆணையத்தில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹைதராபாத்: ‘அர்ஜுன் ரெட்டி’ நாயகன் விஜய் தேவரகொண்டா நடித்துள்ள ‘நோட்டா’ படத்திற்கு தடைக் கோரி தேர்தல் ஆணையத்தில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா நடித்துள்ள ‘நோட்டா’ திரைப்படம் வரும் அக்.5ம் தேதி ரிலீசாகிறது. இப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் விஜய் தேவரகொண்டா அறிமுகமாகிறார். இப்படத்துக்கான புரொமோஷன் நிகழ்ச்சிகளில் விஜய் தேவரகொண்டா தீவிரமாக இறங்கியுள்ளார்.

nota

இப்படம் ரிலீசுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், தணிக்கைக் குழுவின் முன்னாள் உறுப்பினர் ஜெகதீஸ்வர் ரெட்டி, ‘நோட்டா’ படத்துக்கு தடைக் கோரி தேர்தல் ஆணையத்தில் புகார் தெரிவித்துள்ளார். அவரது மனுவில், ‘நோட்டா’ திரைப்படம் வாக்களிக்க விரும்பாத கட்சிகளுக்கு பதில் மக்கள் நோட்டாவை தேர்ந்தெடுப்பதை ஊக்குவிக்கும் விதமாக இந்த படம் உருவாகியுள்ளது. இது ஜனநாயகத்திற்கு எதிரானது. இது தேர்தலில் குழப்பத்தை ஏற்படுத்தும்.

விரைவில் தெலங்கானாவில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், ’நோட்டா’ படத்தை பார்த்தால் மக்கள் நோட்டாவுக்கு தான் வாக்களிப்பார்கள். உயர் அதிகாரிகள் படத்தை பார்த்த பின்னர் திரையிட வேண்டும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

vijaydeverakonda

அரசியல் குறித்த இப்படத்தை பார்க்கும் தவறான அரசியல்வாதிகளுக்கு உறுத்தும், தவறு செய்யாதவர்கள் மக்களுடன் சேர்ந்து படத்தை பார்த்து ரசிக்கலாம் என மிகவும் நாசூக்கான பதிலை விஜய் தேவரகொண்டா பேட்டி ஒன்றில் தெரிவித்திருந்தார். விஜய் தேவரகொண்டா சொன்னதையடுத்து, அரசியல்வாதிகள் இந்த படத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்க முடியாத சூழல் உருவாகியுள்ளது. இந்நிலையில், முன்னாள் தணிக்கைக்குழு உறுப்பினரின் புகாரை தேர்தல் ஆணையம் பரிசீலிக்குமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.