நோக்கியா 9 பியூர் வியூ ஸ்மார்ட்போன் புகைப்படங்கள் இணையத்தில் வெளியானது

 

நோக்கியா 9 பியூர் வியூ ஸ்மார்ட்போன் புகைப்படங்கள் இணையத்தில் வெளியானது

நோக்கியா 9 பியூர் வியூ ஸ்மார்ட்போன் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது.

டெல்லி: நோக்கியா 9 பியூர் வியூ ஸ்மார்ட்போன் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது.

ஸ்மார்ட்போன் ஆர்வலர்கள் மத்தியில் பெரிதும் எதிர்பார்க்கப்படும் ஸ்மார்ட்போனாக ஹெச்.எம்.டி குளோபல் நிறுவனத்தின் நோக்கியா 9 பியூர் வியூ ஸ்மார்ட்போன் இருக்கிறது. இந்த புதிய மாடல் பிப்ரவரி 24-ஆம் தேதி அறிமுகம் செய்யப்படவிருக்கிறது. இந்நிலையில், நோக்கியா 9 பியூர் வியூ ஸ்மார்ட்போன் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது. அந்தப் புகைப்படங்கள் மூலம் இந்த ஸ்மார்ட்போன் மாடலில் ஐந்து கேமரா லென்ஸ் வழங்கப்பட இருப்பது உறுதியாகி இருக்கிறது.

மேலும் ஸ்மார்ட்போனுடன் ஹெச்.எம்.டி. குளோபல் நிறுவனம் நோக்கியா 8.1 மற்றும் நோக்கியா 1 பிளஸ் ஆகிய ஸ்மார்ட்போன்களையும் அறிமுகம் செய்ய இருக்கிறது. நோக்கியா 9 பியூர் வியூ ஸ்மார்ட்போனில் கிளாஸி பேக் பேனல் கொண்டிருப்பது புகைப்படங்கள் வாயிலாக உறுதியாகியிருக்கிறது. அதேபோல ஸ்மார்ட்போனின் முன்புறம் வளைந்த ஓரங்களை கொண்டிருக்கிறது. அதேசமயம் டிஸ்பிளே நாட்ச் எதுவும் காணப்படவில்லை. இதன் பெசல்கள் தடிமனாக இருப்பதுடன் அதில் செல்ஃபி கேமரா, இயர்பீஸ் மற்றும் இதர சென்சார்கள் வழங்கப்பட்டுள்ளன. ஸ்மார்ட்போனின் பின்புறம் ஐந்து கேமரா சென்சார்கள் உட்பட எல்.இ.டி. ஃபிளாஷ் மற்றும் வட்ட வடிவம் கொண்ட டெப்த் சென்சார் இடம்பெற்றுள்ளது. பேக் பேனல் ரிஃப்ளெக்டிவ் ஃபினிஷ் செய்யப்பட்டிருக்கிறது.