நோக்கியா 8.1 ஸ்மார்ட்போன் எப்போது வெளியாகும்?

 

நோக்கியா 8.1 ஸ்மார்ட்போன் எப்போது வெளியாகும்?

நோக்கியா 8.1 ஸ்மார்ட்போன் ஹெச்.எம்.டி குளோபல் நிகழ்ச்சியில் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மும்பை: நோக்கியா 8.1 ஸ்மார்ட்போன் ஹெச்.எம்.டி குளோபல் நிகழ்ச்சியில் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நோக்கியா 8.1 ஸ்மார்ட்போன் வருகிற டிசம்பர் மாதம் 5-ஆம் தேதி நடைபெறவிருக்கும் ஹெச்.எம்.டி குளோபல் நிகழ்ச்சியில் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நோக்கியா எக்ஸ்7 ஸ்மார்ட்போனின் குளோபல் வேரியண்டாக நோக்கியா 8.1 அறிமுகமாகிறது. நோக்கியா 8.1 ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு பையில் இயங்குமென்று எதிர்பார்க்கப்படுகிறது.

6.18 இன்ச் ஹெச்.டி+ 18.7:9 என்ற வீதத்திலான திரை மற்றும் 2.5டி குழிந்த கண்ணாடியை கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் ஆக்டா கோர் குவால்கம் ஸ்நாப்டிராகன் 710 SoCயுடன் 4ஜிபி /6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி/128ஜிபி உள்கட்ட சேமிப்பு வசதி உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

400 ஜிபிக்கு வரை உள்ள மைக்ரோ எஸ்.டி கார்டுகளை பயன்படுத்திக் கொள்ளலாம். நோக்கியா 8.1ல் டூயல் கேமரா செட்டப் உள்ளது. இதில் 12 மெகா பிக்சல் பிரைமரி சென்சார் மற்றும் 13 மெகா பிக்சல் செகண்டரி சென்சார் உள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் 20 மெகா பிக்சல் செல்ஃபி கேமரா உள்ளது. நோக்கியா எக்ஸ்7ல் 3,500 எம்.ஏ.எச் பேட்டரி இருக்குமென்று எதிர்பார்க்கப்படுகிறது.