நோக்கியா 5.2 ஸ்மார்ட்போனின் விலை, புகைப்படங்கள் ஆன்லைனில் வெளியானது

 

நோக்கியா 5.2 ஸ்மார்ட்போனின் விலை, புகைப்படங்கள் ஆன்லைனில் வெளியானது

நோக்கியா 5.2 ஸ்மார்ட்போனின் விலை, புகைப்படங்கள் ஆன்லைனில் வெளியாகி உள்ளது.

டெல்லி: நோக்கியா 5.2 ஸ்மார்ட்போனின் விலை, புகைப்படங்கள் ஆன்லைனில் வெளியாகி உள்ளது.

2020 சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழாவுக்கான நோக்கியா சிறப்பு நிகழ்வு வருகிற பிப்ரவரி 23-ம் தேதி நடைபெற இருப்பதாக ஹெச்.எம்.டி. குளோபல் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த நிகழ்வில் புதிய நோக்கியா பிராண்டு ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் செய்யப்பட வாய்ப்பிருப்பதாக எதிர்பார்க்கப்படுகிறது. அதன்படி நோக்கியா 8.2 5ஜி, நோக்கியா 5.2, நோக்கியா 1.3 மற்றும் புதிய நோக்கியா ‘ஒரிஜினல்’ ஸ்மார்ட்போன் ஆகியவை அறிமுகம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

nokia

நோக்கியா 5.2 ஸ்மார்ட்போனில் 6.2 இன்ச் டிஸ்பிளே, டூயல் பிரைமரி கேமரா, 8 எம்.பி செல்ஃபி கேமரா, ஸ்னாப்டிராகன் 632 பிராசஸர், 4 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி ஆகிய சிறப்பம்சங்கள் இடம்பெற்றிருக்கலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது. இதன் விலை இந்திய மதிப்பில் ரூ. 13,300 வரை நிர்ணயம் செய்யப்படலாம் என்று தெரிகிறது. அதேபோல நோக்கியா 1.3 ஸ்மார்ட்போனில் 6.0 இன்ச் டிஸ்பிளே, 1 ஜிபி ரேம், 8 ஜிபி மெமரி, 13 எம்.பி பிரைமரி கேமரா, 5 எம்.பி செல்ஃபி கேமரா ஆகிய சிறப்பம்சங்கள் இடம்பெற்றிருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் விலை இந்திய மதிப்பில் ரூ. 6,200 என நிர்ணயம் செய்யப்படலாம் என்று தெரிகிறது.