நோக்கியாவின் பட்ஜெட் ரக ஸ்மார்ட்போனில் ‘ஆண்ட்ராய்டு 9 பை’ அப்டேட்!

 

நோக்கியாவின் பட்ஜெட் ரக ஸ்மார்ட்போனில் ‘ஆண்ட்ராய்டு 9 பை’ அப்டேட்!

நோக்கியா 2.1 ஸ்மார்ட்போனுக்கு ‘ஆண்ட்ராய்டு 9 பை’ அப்டேட் வழங்கப்பட்டுள்ளது.

பெய்ஜிங்: நோக்கியா 2.1 ஸ்மார்ட்போனுக்கு ஆண்ட்ராய்டு 9 பை அப்டேட் வழங்கப்பட்டுள்ளது.

சமீபகாலமாக பல்வேறு முன்னணி ஸ்மார்ட்போன்களுக்கு ஆண்ட்ராய்டு 9 பை அப்டேட் கிடைத்து வந்த நிலையில், முதன்முறையாக நோக்கியா 2.1 பட்ஜெட் ஸ்மார்ட்போனுக்கு இந்த அப்டேட் வழங்கப்பட்டுள்ளது. ஹெச்.எம்.டி குளோபல் (நோக்கியா) நிறுவனத்தின் தலைமைத் தயாரிப்பு நிர்வாகி இது தொடர்பாக தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார். கடந்தாண்டு மே மாதம் நோக்கியா 2.1 அறிமுகம் செய்யப்பட்டது. ஒரே வருடத்தில் ஆண்ட்ராய்டு 9 பை அப்டேட் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஸ்மார்ட்போன் ரூ.5,649-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

எனினும் இந்த ஸ்மார்ட்போனில்  அப்டேட் சென்று சேர்வதற்கு சில நாட்கள் ஆகும். சுமார் 500 எம்.பி டேட்டா அளவுக்கு இந்த அப்டேட்டை டவுன்லோடு செய்யத் தேவைப்படும். நோக்கியா 2.1 சிறப்பம்சங்களை பொறுத்தவரை 5.5 இன்ச் ஹெச்.டி டிஸ்பிளே, குவாட்கோர் ஸ்னாப்டிராகன் 425 சிப்செட், 1 ஜிபி ரேம், 8 ஜிபி மெமரி, ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ (கோ எடிஷன்), ஆன்ட்ராய்டு பி அப்டேட், டூயல் சிம் ஸ்லாட், 8 எம்பி ஆட்டோஃபோகஸ் பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ், 5 எம்பி செல்ஃபி கேமரா, 4ஜி வோல்ட்இ, வைஃபை, ப்ளூடூத், 4100 எம்.ஏ.ஹெச். பேட்டரி ஆகியவை இடம்பெற்றுள்ளன.