நைட்டு ஏ.டி.எம்.ல்ல பணம் எடுக்க போறீங்களா? அப்பம் கையில செல்போனும் கட்டாயம் கொண்டு போங்க….

 

நைட்டு ஏ.டி.எம்.ல்ல பணம் எடுக்க போறீங்களா? அப்பம் கையில செல்போனும் கட்டாயம் கொண்டு போங்க….

இரவு நேரத்தில் ஸ்டேட் வங்கி ஏ.டி.எம்.களில் பணம் எடுப்பதாக இருந்தால் ஓ.டி.பி. குறிப்பிடவேண்டும். இந்த புதிய வசதி 2020 ஜனவரி முதல் அமலுக்கு வருவதாக ஸ்டேட் வங்கி தெரிவித்துள்ளது.

ஸ்டேட் வங்கி இது தொடர்பாக பேஸ்புக்கில் பதிவு செய்து இருப்பதாவது: ஸ்டேட் வங்கி ஏ.டி.எம்.களில் ஸ்டேட் வங்கி வாடிக்கையாளர்கள் இரவு நேரத்தில் ரூ.10 ஆயிரத்துக்கு மேல் பணம் எடுப்பதாக இருந்தால் ஒ.டி.பி. குறிப்பிட வேண்டியது அவசியமாகும். அங்கீகரிக்கப்படாத அல்லது மோசடி பரிவர்த்தனைகளை குறைக்கும் நோக்கில் ஒ.டி.பி. அடிப்படையில் பணம் எடுக்கும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. வரும் ஜனவரி முதல் இந்த வசதி நடைமுறைக்கு வருகிறது.

ஸ்டேட் வங்கி

இரவு 8 மணி முதல் அடுத்த நாள் காலை 8 மணி வரையிலான 12 மணி நேரத்தில், ஸ்டேட் வங்கி ஏ.டி.எம்.களில் அதன் வாடிக்கையாளர்கள் பணம் எடுப்பதற்காக தேவையான பணத்தை குறிப்பிட்ட உடன் (ரூ.10 ஆயிரத்துக்கு மேல் இருந்தால்) ஓ.டி.பி.  திரை வரும். வாடிக்கையாளர் தனது செல்போனுக்கு வந்த ஓ.டி.பி. எண்ணை அதில் குறிப்பிட வேண்டும். அதன் பிறகுதான் ஏ.டி.எம். மிஷினிலிருந்து பணம் வரும். அதனால எஸ்.பி.ஐ. வாடிக்கையாளர்களே இரவு நேரத்தில் ஏ.டி.எம்.மில் பணம் எடுக்க போறதா இருந்தா கையில கார்டு மட்டுமல்ல செல்போனையும் கொண்டு போங்க.  

ஸ்டேட் வங்கி

அதேசமயம் எஸ்.பி.ஐ. வாடிக்கையாளர்கள் மற்ற வங்கிகளின் ஏ.டி.எம்.களில் பணம் எடுக்கும் போது இந்த வசதி பொருந்தாது. அதாவது எஸ்.பி.ஐ. ஏ.டி.எம்.களில் உள்ள ஓ.டி.பி. அடிப்படையிலான பணம் எடுக்கும் வசதி மற்ற வங்கிகளின் ஏ.டி.எம்.களில் இருக்காது. ஏனென்றால் இந்த வசதி தேசிய நிதி சுவிட்ச்சால் (என்.எப்.எஸ்.) மேம்படுத்தப்பட்டது அல்ல.