நேற்று சரிவு இன்று ஏற்றம் இதுதாங்க பங்கு வர்த்தகம்! சென்செக்ஸ் 247 புள்ளிகள் உயர்ந்தது

 

நேற்று சரிவு இன்று ஏற்றம் இதுதாங்க பங்கு வர்த்தகம்! சென்செக்ஸ் 247 புள்ளிகள் உயர்ந்தது

இந்திய பங்குச் சந்தைகளில் இன்று வர்த்தகம் நன்றாக இருந்தது. சென்செக்ஸ் 247 புள்ளிகள் உயர்ந்தது.

கடந்த செப்டம்பர் மாதத்தில் பயணிகள் வாகனங்கள் விற்பனை 24 சதவீதம் குறைந்தது. ஈரானின் எண்ணெய் கப்பல்கள் தாக்கப்பட்டதால் சர்வதேச சந்தையில் பெட்ரோலிய கச்சா எண்ணெய் விலை உயர்ந்தது. இது போன்ற பாதகமான செய்திகள் பங்குச் சந்தைகளில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. அதேசமயம், இன்போசிஸ் நிறுவனத்தின் நிதிநிலை முடிவுகள் சிறப்பாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பில் அந்நிறுவனத்தின் பங்கு விலை 4 சதவீதத்துக்கு மேல் உயர்ந்தது.

பெட்ரோலிய கச்சா எண்ணெய் விலை

சென்செக்ஸ் கணக்கிட உதவும் நிறுவன பங்குகளில், இன்போசிஸ்,டாடா ஸ்டீல், டாடா மோட்டார்ஸ், வேதாந்தா, ஓ.என்.ஜி.சி. மற்றும் டெக்மகிந்திரா உள்பட 20 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. அதேசமயம், யெஸ் பேங்க், மகிந்திரா அண்டு மகிந்திரா, டி.சி.எஸ்., ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் மற்றும் சன்பார்மா உள்பட 10 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது.

பயணிகள் வாகனங்கள்

மும்பை பங்குச் சந்தையில் இன்று 1,106 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. 1,360 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது. அதேவேளையில் 162 நிறுவன பங்குகளின்  விலையில் எந்தவித மாற்றமும் இன்றி முடிவடைந்தது. மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.144.03 லட்சம் கோடியாக உயர்ந்தது. நேற்று வர்த்தகம் முடிவடைந்தபோது நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.143.21 லட்சம் கோடியாக இருந்தது.

டி.சி.எஸ்.
இன்றைய வர்த்தகத்தின் முடிவில் மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 246.68 புள்ளிகள் உயர்ந்து 38,127.08 புள்ளிகளில் நிலை கொண்டது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டி 70.50 புள்ளிகள் ஏற்றம் கண்டு 11,305.05 புள்ளிகளில் முடிவுற்றது.