நேற்று கிலோ 400 ரூபாய்க்கு விற்ற மல்லிகைப் பூ இன்று 1000 ரூபாய்!

 

நேற்று கிலோ 400 ரூபாய்க்கு விற்ற மல்லிகைப் பூ இன்று 1000 ரூபாய்!

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு மதுரை மலர் சந்தையில் பூக்கள் விலை ஒரு மடங்கு அதிகரித்து விற்பனை செய்யப்படுகிறது. 

நாளை மறுநாள் விநாயகர் சதுர்த்தி விழா நடைபெருவதையொட்டி மதுரை மலர் சந்தையில் பூக்கள் விற்பனை மற்றும் விலை அதிகரித்துள்ளது. 

நேற்று  400 ரூபாய்க்கு விற்பனையான ஒரு கிலோ மல்லிகை 600 ரூபாய் விலை அதிகரித்து 1000 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

flower

60 ரூபாய்க்கு விற்பனையான சம்மங்கி பூ 250 ரூபாய்க்கும், 500 ரூபாய்க்கு விற்பனையான முல்லைப்பூ 1000 ரூபாய்க்கும்,  400 ரூபாய்க்கு விற்பனையான பிச்சி பூ 900 ரூபாய்க்கும், 100 ரூபாய்க்கு விற்பனையான செவ்வந்தி பூ 150 ரூபாய்க்கும், 100 ரூபாய்க்கு விற்பனையான ரோஜா பூ 200 ரூபாய்க்கும் விற்பனையாகி வருகிறது. பூக்கள் வரத்து குறைவால் நாளை மேலும் விலை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக விற்பனையாளர்கள் தகவல் தெரிவிக்கின்றனர்.