“நேர்மையாக வருமான வரி செலுத்துபவன் நான்” கந்துவட்டி ரஜினி என்று கிண்டல் செய்தவர்களுக்கு ரஜினிகாந்த் பதில்!

 

“நேர்மையாக வருமான வரி செலுத்துபவன் நான்” கந்துவட்டி ரஜினி என்று கிண்டல் செய்தவர்களுக்கு ரஜினிகாந்த் பதில்!

நீதிமன்றத்தில் நிலுவையில் இந்த வழக்கை சமீபத்தில்   வருமானவரித்துறை திடீரென்று வாபஸ் பெற்றது. 

கடந்த 2002-2003 மற்றும் 2004-05-ம் நிதியாண்டுகளில் வருமானத்தை மறைத்ததாக நடிகர் ரஜினிகாந்த்துக்கு எதிராக புகார் எழுந்தது. இதுகுறித்து அபராதம் விதிக்கக்கோரிய வழக்கில்  சென்னை உயர்நீதிமன்றத்தில் வருமானவரித் துறை மேல்முறையீடு செய்திருந்தது. நீதிமன்றத்தில் நிலுவையில் இந்த வழக்கை சமீபத்தில்   வருமானவரித்துறை திடீரென்று வாபஸ் பெற்றது. 

 

 இதுகுறித்து வருமான வரித்துறை அளித்த விளக்கத்தில்,  ரஜினிகாந்த் 2002-03-ம் நிதியாண்டில் கோபாலகிருஷ்ண ரெட்டி, அர்ஜுன்லால், சசி பூஷண், சோனு பிரதாப் ஆகியோருக்கு ரஜினி  18% வட்டிக்கு  2 கோடியே 63 லட்சம் ரூபாய் கடன் வழங்கியுள்ளார். இதற்காக 1 லட்சத்து 45 ஆயிரம் ரூபாயை வட்டியாக பெற்றுள்ளார். அதில்  ஒரு கோடியே 71 லட்சம் ரூபாய் கடன் திரும்ப வரவில்லை என்றும், இதன் காரணமாக, 33 லட்சத்து 93 ஆயிரம் ரூபாய் இழப்பு ஏற்பட்டது என்றும் குறிப்பிட்டுள்ளார். கடன் கொடுத்ததைத் தொழிலாக கருதமுடியாது. தெரிந்தவர்களுக்கு நட்பு ரீதியில் கடன் கொடுத்தேன் என்று ரஜினி கூறியதால் அவர் மீதான வழக்கை  வாபஸ் பெறுவதாக வருமானவரி துறை விளக்கம் அளித்தது.  இந்த விவகாரம் பூதாகராக ஆனதால் இணையத்தில் ரஜினியை கந்துவட்டி கபாலி, கந்துவட்டி ரஜினி என்று விமர்சித்து வந்தனர்.

ttn

இந்நிலையில் இன்று சென்னை போயஸ் கார்டனில் செய்தியாளர்களைச் சந்தித்த அவரிடம் இதுகுறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “நேர்மையாக வருமான வரி செலுத்துபவன் நான். சட்ட விரோதமாக எதையுமே நான் செய்யவில்லை” என்று விளக்கமளித்துள்ளார்.