நேர்கொண்ட பார்வை படம் எப்படி இருக்கு? இதோ பிரபலங்கள் பதிவு!

 

நேர்கொண்ட பார்வை படம் எப்படி இருக்கு? இதோ பிரபலங்கள் பதிவு!

சென்னை: தல அஜித்தின் நேர்கொண்ட பார்வை படம் இன்று வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. 

தல அஜித் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் நேர்கொண்ட பார்வை. இயக்குநர் ஹெச்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தை மறைந்த நடிகை ஸ்ரீ தேவியின் கணவர் போனிகபூர் தயாரித்துள்ளார்.இந்த படத்தில் வித்யா பாலன், ஸ்ரத்தா ஸ்ரீநாத், அபிராமி, டெல்லி கணேஷ் ஆகியோர் நடித்துள்ளனர். 

உலகம் முழுவதும் நேர்கொண்ட பார்வை இன்று வெளியாகியுள்ள நிலையில் அவரது ரசிகர்கள் மிகவும் ஆர்வத்துடன் திரையரங்கிற்குச் சென்று பார்த்து மகிழ்கின்றனர். இந்த நிலையில், தல அஜித்தின் நேர்கொண்ட பார்வை படத்தை ரசிகர்களோடு ரசிகர்களாக சினிமா பிரபலங்கள் பலரும் முதல் நாள் முதல் ஷோ பார்த்து மகிழ்ந்துள்ளனர்.  பிறகு படத்தை பற்றி தங்களது விமர்சனத்தை ட்விட்டரில் வெளியிட்டுள்ளனர்.