நேர்கொண்ட பார்வை படத்தைத் திருட்டுத்தனமாக வெளியிடத் தடை! 

 

நேர்கொண்ட பார்வை படத்தைத் திருட்டுத்தனமாக வெளியிடத் தடை! 

நேர்கொண்ட பார்வை படத்தைத் திருட்டுத்தனமாக இணையதளங்களில் வெளியிடச் சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது 

சென்னை: நேர்கொண்ட பார்வை படத்தைத் திருட்டுத்தனமாக இணையதளங்களில் வெளியிடச் சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது 

தல அஜித் நடிப்பில் ஹெச்.வினோத் இயக்கத்தில் நாளை வெளியாகவுள்ள படம்  நேர்கொண்ட பார்வை. மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனிகபூர் தயாரித்துள்ள இந்த படத்தில் வித்யா பாலன், ஸ்ரத்தா ஸ்ரீநாத், டெல்லி கணேஷ் ஆகியோர் நடித்துள்ளனர். முழுக்க முழுக்க பெண்ணியப் படமாக பெண்களின் சுதந்திரத்தையும் , உரிமைகளையும், இந்தியச் சமூகத்தில் பெண் மீது நிலவும் பாலியல் பிரச்சனைகளை அழுத்தமாகக் கொண்டுள்ள இந்த படத்தின் பட்ஜெட் சுமார் 100 கோடியை எட்டியுள்ளது. 

அஜித்

அதனால் படத்தை திருட்டுத்தனமாக இணையதளங்களில் வெளியிடுவதைத் தடுக்கக்கோரி தயாரிப்பாளர் போனி கபூர், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடுத்தார். அது நேற்று நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது தயாரிப்பாளர் போனிகபூர் சார்பில் ஆஜராகிய வக்கீல் விஜயன் சுப்பிரமணியன் நேர்கொண்ட பார்வை படம் அதீதமான பொருட்செலவில் 100க்கும் மேற்பட்ட கலைஞர்களின் உழைப்பில் உருவாகியுள்ளது. 

அதனால் படத்தைச் சட்டவிரோதமாக கேபிள் மற்றும் இணையதளங்களில் வெளியிடுவதால் தயாரிப்பாளருக்கு பெரும் பொருளாதார இழப்பும் மன உளைச்சலும் உருவாகும். எனவே படத்தைத் திருட்டுத்தனமாக வெளியிடும் 1129 இணையதளங்களை வெளியிடத் தடை உத்தரவிட வேண்டும் என்று கூறப்பட்டது. மனுதாரரின் வாதத்தை ஏற்றுக் கொண்ட நீதிபதி நேர்கொண்ட பார்வை திரைப்படத்தை வெளியிட வாய்ப்புள்ள இணையதளங்களை முடக்க உத்தரவிட்டுள்ளார்.