நேர்கொண்ட பார்வை படத்தின் ட்ரைலர் ரசிகர்களிடம் வரவேற்பு பெறாததற்கு இது தான் காரணம்?

 

நேர்கொண்ட பார்வை படத்தின் ட்ரைலர் ரசிகர்களிடம் வரவேற்பு பெறாததற்கு இது தான் காரணம்?

தல அஜித் நடிப்பில் உருவாகியுள்ள நேர்கொண்ட பார்வை இன்னும் சில மாதங்களில் திரைக்கு வரவுள்ளது.

தல அஜித் நடிப்பில் உருவாகியுள்ள நேர்கொண்ட பார்வை இன்னும் சில மாதங்களில் திரைக்கு வரவுள்ளது. வினோத் இயக்கியுள்ள இந்த படத்தை மறைந்த நடிகை ஸ்ரீ தேவியின் கணவர் போனி கபூர் தயாரித்துள்ளார். சமீபத்தில் படத்தின் டீஸர் வெளியானது. அது அவர்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. 

ஆனால், என்ன பிரச்சனை என்று தெரியவில்லை, எதிர்பார்த்த அளவிற்கும் ட்ரைலர் ஹிட் அடிக்கவில்லை என்று ஒரு தரப்பு கூறிவந்தனர். ஆம், தல அஜித்தின் விஸ்வாசம் ட்ரைலர் 30 மில்லியனை கடந்து, 1 மில்லியனுக்கு மேல் லைக்ஸுகளை குவித்தது.  

ஆனால், நேர்கொண்ட பார்வை இன்று வரை 10 மில்லியனை கூட தொடவில்லை, லைக்ஸும் தற்போது வரை 8 லட்சம் தான் வந்துள்ளது. ஏன் இது போன்று நிகழ்ந்தது என்று அஜித் ரசிகர்கள் மிகுந்த சோகத்தில் உள்ளனர். 

இந்த நிலையில் இதற்கு முக்கிய காரணம் என்னவென்றால் இது மற்ற அஜித் படங்களைப் போல் மசாலா படம் இல்லை, மேலும், காலை அறிவித்துவிட்டு, மாலையே ட்ரைலர் வெளியிட்டது தான் ஒரு காரணம் எனக் கூறப்படுகின்றது. மொத்தத்தில் எது எப்படியோ அஜித்தின் படம் வெளியாகும் முதல் நாளில் வசூல் தெரிந்துவிடும் என்று அவரது ரசிகர்கள் கூறி வருகின்றனர்.