நேர்கொண்ட பார்வை: திருமணமான கோலத்தில் அஜித் -வித்யா பாலன்! வைரலாகும் புகைப்படம்!

 

நேர்கொண்ட பார்வை: திருமணமான கோலத்தில் அஜித் -வித்யா பாலன்! வைரலாகும் புகைப்படம்!

நேர்கொண்ட பார்வை படத்தில் அஜித்- வித்யா பாலன் திருமண கோலத்தில் இருக்கும் புகைப்படம் வைரலாகி வருகிறது. 

சென்னை: நேர்கொண்ட பார்வை படத்தில் அஜித்- வித்யா பாலன் திருமண கோலத்தில் இருக்கும் புகைப்படம் வைரலாகி வருகிறது. 

தல அஜித் நடிப்பில் சமீபத்தில் வெளியான விஸ்வாசம் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. அதையடுத்து தற்போது ஹெச்.வினோத் இயக்கத்தில்,போனி கபூர் தயாரிப்பில் உருவாகிவரும் நேர்கொண்ட பார்வை திரைப்படத்தில் நடித்து வருகிறார். 

இப்படத்தில் அஜித்துடன் இணைந்து வித்யா பாலன், ஷ்ரத்தா ஸ்ரீநாத்,ஆண்ட்ரியா, அபிராமி வெங்கடாச்சலம்,  தாரியங், ரங்கராஜ் பாண்டே, ஆதிக் ரவிச்சந்திரன், அர்ஜுன் சிதம்பரம், அஸ்வின் ராவ், சுஜித், டெல்லி கணேஷ் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். யுவன்ஷங்கர் ராஜா இசையமைக்கும் இப்படத்திற்கு நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்கிறார்.

இந்த நிலையில் கடந்த சில மாதமாக ஹைதராபாத்தில் உள்ள ராமோஜி ராவ் ஃபிலிம் சிட்டியில் நடைபெற்று வந்த இப்படத்தின் ஷூட்டிங் பணிகள், தற்போது முழுவதுமாக நிறைவடைந்துவிட்டதாகத்  சம்பத்தில் தகவல் வெளியானது.

vidhya balan

இந்நிலையில் இப்படத்தின் புகைப்படம் அடிக்கடி இணையத்தில் வெளியாகி வைரலாகிறது. அந்த வகையில் இம்முறை நடிகை வித்யா பாலன் ரசிகருடன் எடுத்து கொண்ட புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. அந்த புகைப்படத்தில் அவர்களுக்குப் பின்னால் அஜித் மற்றும் வித்யா பாலன் திருமண கோலத்தில் இருக்கும் புகைப்படமும் இருக்கிறது.

vidhya balan

இதன்மூலம் இப்படத்தில் நடிகை வித்யா பாலன், அஜித்தின் மனைவியாக நடிப்பது தற்போது உறுதியாகியுள்ளது. 

இதையும் படிங்க: தனுஷ் ரசிகர்களைத் தாக்கிய ‘என்னை நோக்கி பாயும் தோட்டா! சீறுமா…சிக்குமா!?