’நேர்கொண்ட பார்வை’ டீஸர் இன்று இதனால்தான் வெளியாகவில்லை…

 ’நேர்கொண்ட பார்வை’ டீஸர் இன்று இதனால்தான் வெளியாகவில்லை…

கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாகவே ‘நேர்கொண்ட பார்வை’ படத்தின் டீஸர் தல அஜீத்தின் பிறந்த நாளன்று ரிலீஸாகவிருப்பதாக செய்திகள் நடமாடிவந்த நிலையில் நேற்று ஒரு செகண்ட் லுக் போஸ்டர் கூட வெளியிடப்படாததில் ரசிகர்கள் ஏகத்துக்கும் அப்செட்.

இது குறித்து இயக்குநர் ஹெச்.வினோத் மற்றும் அஜீத் தரப்பில் விசாரித்தபோது, துவக்கத்தில் அப்படி எண்ணம் இருந்தது உண்மைதான்.அதற்காகவே அவசர அவசரமாக ஒரு டீஸரும் உருவாக்கப்பட்டது. அதை தயாரிப்பாளரும் விரும்பவே செய்தார். ஆனால் ரிலீஸ் தேதி ஆகஸ்ட் 10 என்கிற வெகு தூரத்தில் இருப்பதால், பட எதிர்பார்ப்பிற்கான சுவாரசியம் குறைந்துவிடும் என்பது அஜீத் உள்ளிட்ட ஒட்டுமொத்தக் குழுவின் கருத்தாக இருந்திருக்கிறது.

nerkonda paarvai

எனவே அஜீத்தின் பிறந்தநாள் கொண்டாட்டமே பெருங்கொட்டாட்டமாக இருக்கும்போது அதில் டீஸரோ, செகண்ட் லுக் போஸ்டரோ இடம்பெற வேண்டியதில்லை என்று ஒட்டுமொத்தமாகவே முடிவெடுத்திருக்கிறார்கள்.இப்போதைய திட்டப்படி ஜூலை முதல் அல்லது இரண்டாவது வாரத்தில்தான் ‘நே.கொ.பா’பட டீஸர் வெளியாகும்.

அதுவரை ஃபேன் மேட் போஸ்டர்களயும் டீஸர்களையும் ரசித்துக் கொண்டிருக்க வேண்டியது தான்.