நேர்கொண்ட பார்வை: இந்திய அளவில் டிரெண்டான அஜித்தின் அகலாதே பாடல் வீடியோ! 

 

நேர்கொண்ட பார்வை: இந்திய அளவில் டிரெண்டான அஜித்தின் அகலாதே பாடல் வீடியோ! 

அகலாதே பாடல் வீடியோ இந்திய அளவில் ட்விட்டரில் ட்ரெண்டாகி வருகிறது. 

சென்னை: அகலாதே பாடல் வீடியோ இந்திய அளவில் ட்விட்டரில் ட்ரெண்டாகி வருகிறது. 

ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் கடந்த வியாழக்கிழமை வெளியான படம் நேர்கொண்ட பார்வை. இந்தியில் வெளியான பிங்க் படத்தின் ரீமேக்கான இதை போனி கபூர் தயாரித்துள்ளார். முழுக்க முழுக்க பெண்களைப் பற்றி உருவாகியுள்ள இந்த படத்தை அஜித் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். அது மட்டுமின்றி பாக்ஸ் ஆபிசில் வசூல் சாதனை செய்து வருகிறது. 

ஒரு பெண் நோ என்று சொன்னால் அதன் அர்த்தம் நோ என்று அஜித் பேசிய வசனம் தான் தற்போது சமூகவலைத்தளங்களில் ட்ரெண்டாக உள்ளது. இதில் அஜித்தின் நடிப்பைப் பார்த்து ரசிகர்கள் மட்டுமின்றி திரையுலக பிரபலங்களும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

இந்நிலையில் படத்தில் இடம்பெற்றுள்ள ‘அகலாதே’ பாடலின் வீடியோவை படக்குழ தற்போது வெளியிட்டுள்ளனர். கணவன் மனைவி இடையே இருக்கும் அழகான காதலை வெளிப்படுத்தும் அந்த பாடலை ரசிகர்ககள் கொண்டாடி வருகின்றனர். இதன் மூலம் #Agalaathey என்ற ஹாஸ் டாக் இந்திய அளவில் ட்ரெண்டாக்கி வருகின்றன.