‘நேரில் ஆஜராக வேண்டியதில்லை’..நடிகர் கமல்ஹாசன் தொடர்ந்த வழக்கில் உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

 

‘நேரில் ஆஜராக வேண்டியதில்லை’..நடிகர் கமல்ஹாசன் தொடர்ந்த வழக்கில் உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

கடந்த பிப்ரவரி 19-ஆம் நடைபெற்று வந்த இந்தியன்-2 படப்பிடிப்பின் போது எதிர்பாராத விதமாக கிரேன் அறுந்து விழுந்து 3 பேர் உயிரிழந்தனர்.

கடந்த பிப்ரவரி 19-ஆம் நடைபெற்று வந்த இந்தியன்-2 படப்பிடிப்பின் போது எதிர்பாராத விதமாக கிரேன் அறுந்து விழுந்து 3 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவம் திரைத்துறையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இது குறித்து 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த விபத்து குறித்து விளக்கம் அளிக்குமாறு மத்திய குற்றப்பிரிவு போலீசார் நடிகர் கமல்ஹாசனுக்குச் சம்மன் அனுப்பியதை அடுத்து அவர் நேரில் சென்று விளக்கம் அளித்தார். 

ttn

இந்நிலையில் இன்று காலை இந்தியன் 2 விபத்து குறித்து காவல்துறை விசாரணை என்ற பேரில் தன்னை துன்புறுத்துவதாக நடிகர் கமல்ஹாசன் என்று சென்னை உயர்நீதி மன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். அந்த மனுவில், விசாரணைக்குத் தான் முழு ஒத்துழைப்பு அளித்து வந்தும் விபத்து எப்படி நடந்தது என்று போலீசார் தன்னை நடித்துக் காட்டச் சொல்வதாக கமல்ஹாசன் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. 

ttn

இதனையடுத்து இன்று மாலை கமல்ஹாசனின் மனு விசாரணைக்கு வந்தது. அதில், இந்தியன் 2 விபத்தைக் கமல் நேரில் பார்த்தார் என்பதால் தான் அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. வேறு எந்த அரசியல் நோக்கமும் இல்லை என்று போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

ttn

அதனைக் கேட்டுக் கொண்ட நீதிபதிகள், காவல்துறை விசாரணைக்காக விபத்து நடந்த இடத்திற்குக் கமல், நாளை நேரில் செல்ல வேண்டியதில்லை.விசாரணைக்குத் தேவைப்பட்டால் மத்திய குற்றப்பிரிவு அலுவலகத்தில் ஆஜராகலாம் என்று தீர்ப்பு வழங்கினர்.