“நேரக்கட்டுப்பாடு மே 3 வரை தொடரும்” : அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்

 

“நேரக்கட்டுப்பாடு மே 3 வரை தொடரும்” : அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்

பொருளாதார வீழ்ச்சியை சமாளிக்கும் பொருட்டு நாளை முதல் (ஏப் 20 )நிபந்தனைகளுடன் சில தளர்வுகள்   இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

கொரோனாதொற்று காரணமாக கடந்த 24 ஆம்  தேதி பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு நாடு முழுவதும் வரும் மே 3ஆம் தேதி நீட்டிக்கப்பட்டுள்ளது. கொரோனா  தடுக்க மத்திய மாநில அரசுகள் தீவிர நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. இதனால் மக்கள் வீடுகளை விட்டு வெளியில் தேவையில்லாமல் வர வேண்டாம் என்று போலீசார் அறிவுறுத்தி வருகிறார்கள். அத்தியாவசிய பொருட்கள் வாங்க மக்கள் காலை 6 மணிமுதல் 1 மணி வரை மட்டுமே அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள்.  இருப்பினும் பொருளாதார வீழ்ச்சியை சமாளிக்கும் பொருட்டு நாளை முதல் (ஏப் 20 )நிபந்தனைகளுடன் சில தளர்வுகள்   இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

tt

இதுகுறித்து கூறியுள்ள தமிழக அரசு, தமிழ்நாடு அரசின் ஆணைகள் வெளியிடும் வரை தற்போதுள்ள கட்டுப்பாடுகள் தொடர்ந்து நீடிக்கும் என்று அறிவித்துள்ளது. 

tt

இந்நிலையில் வருவாய் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் செய்தியாளர்கள் சந்திப்பில், தமிழகத்தில் நேரக்கட்டுப்பாடு என்பது மே 3 வரை அமலில் இருக்கும்; எந்தவித தளர்வும் இதுவரை ஏற்படுத்தப்படவில்லை என்று கூறியுள்ளார்.