நேசமணிக்கு டஃப் கொடுக்கும் ஹைட்ரோகார்பன்… காமெடி மட்டுமல்ல சீரியஸான விஷயத்துக்கும் நாங்க வருவோம்- நெட்டிசன்கள்!

நேசமணிக்கு டஃப் கொடுக்கும் ஹைட்ரோகார்பன்… காமெடி மட்டுமல்ல சீரியஸான விஷயத்துக்கும் நாங்க வருவோம்- நெட்டிசன்கள்!

தமிழகத்தின் டெல்டா பகுதிகளான தஞ்சை, திருவாரூர்,நாகை ஆகிய பகுதிகளில் எரிவாயு எடுப்பதற்கான டெண்டர் பணிக்கு மத்திய அரசு அனுமதி அளித்து அதற்கான பணிகள் நடைபெற்றுவருகின்றன. இதற்கு எதிராக விவசாயிகள் போராட்டம் நடத்திய நிலையில் #StopHydroCarbon என்ற ஹேஷ்டேக் சென்னை ட்ரெண்டிங்கில் முதலிடத்தில் உள்ளது. 

ஹைட்ரோகார்பன்
ஹைட்ரோ கார்பன் திட்டத்தால் விவசாய நிலங்கள் பாலைவனங்களாகும் என்ற அச்சத்தால் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து தஞ்சை, திருவாரூர், மன்னார்குடி, நன்னிலம், சேத்தான் குளம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள விவசாயிகள் கடந்த 1 மாதங்களாக தொடர்போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக போராடிய பெண்கள் உட்பட 490 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அவர்களை அரசு கண்டுக்கொள்ளாத நிலையில் நெட்டிசன்கள் கண்டுகொள்ள தொடங்கியுள்ளனர். போராட்டம் தீவிரமடைந்துள்ள நிலையில் இன்று காலையிலிருந்து #StopHydroCarbon என்ற ஹேஷ்டேக் ட்விட்டரில் ட்ரெண்டாகி வருகிறது.

விவசாயிகளை பாதிக்கும் இத்திட்டம் தமிழகத்திற்கு தேவையில்லை, விவசாய நிலங்களை அழிக்கும் திட்டம் நமக்கு வேண்டாம், மாநில அரசு ஹைட்ரோ கார்பன் திட்டத்தை தடை செய்ய வாய்திறக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை நெட்டிசன்கள் #StopHydroCarbon என்ற ஹேஷ்டேக்கில் பதிவிட்டு வருகின்றனர்.