நேசமணிக்காக கடவுளிடம் வேண்டும் நெட்டிசன்கள்!

 

நேசமணிக்காக கடவுளிடம் வேண்டும் நெட்டிசன்கள்!

காமெடி மன்னன், மீம்ஸ் அரசன் என அடிக்கிக்கொண்டே போகும் வடிவேலுவின் கதை ஒன்று தற்போது ட்விட்டரில் ட்ரெண்டாகிவருகிறது. 

காமெடி மன்னன், மீம்ஸ் அரசன் என அடிக்கிக்கொண்டே போகும் வடிவேலுவின் கதை ஒன்று தற்போது ட்விட்டரில் ட்ரெண்டாகிவருகிறது. 

ss

காமெடி மேட்டராக இருந்தாலும் சரி, சீரியஸ் மேட்டராக இருந்தாலும் சரி எல்லாவற்றிற்கும் எவ்வளவு அடித்தாலும் தாங்கும் ஒரே நபர் அது வடிவேலு தான். அதுசரி இப்ப ஏன் சமூக வலைதளங்களில் நேசமணிக்காக வேண்டுதல் நடத்துகிறார்கள் என பார்க்கலாம். 

aa

வடிவேலு நடித்த பிரண்ட்ஸ் திரைப்படத்தில் ஒரு காட்சியில் அவரது தலையில் சுத்தியல் விழும் அந்த காட்சியை பார்க்காதவர்களே இருக்க முடியாது. பார்த்துவிட்டு விழுந்துவிழுந்து சிரிக்காதவர்களும் இருக்கமுடியாது. அந்த படத்தில் வடிவேலுவின் பெயர் நேசமணி. அதாவது காண்ட்ராக்டர் நேசமணி.

aa

இந்நிலையில் சமூக வலைதளத்தில் CIVIL ENGINEERING LEARNERS என்ற பேஸ்புக் பக்கத்தில் சுத்தியலின் புகைப்படத்தை பதிவிட்டு இது என்ன? உங்கள் நாட்டில் எவ்வாறு அழைக்கப்படுகிறது என கேள்வியை முன் வைத்திருந்தார். இந்த புகைப்படத்தை பற்றி இரு நண்பர்கள் பேசிக்கொண்டனர். 

tt

அதாவது பிரண்ட்ஸ் படத்தில் வரும் அந்த குறிப்பிட்ட காட்சியை உண்மையான சம்பவம்போல் ஒருவர் கூற, அதைக்கேட்ட மற்றொரு நண்பர், அந்த படத்தில் வடிவேலு நடித்த நேசமணி கதாபாத்திரத்திற்காக பிராத்தனை செய்யுமாறு கேட்டு கொண்டனர். இதையடுத்து #PrayForNesamani என்ற ஹேஷ்டேக் ட்விட்டரில் 1 ஆவது இடத்தில் டிரெண்டாகி வருகிறது.