நெல்லை வீரத்தம்பதிக்கு அமிதாப், ஹர்பஜன் பாராட்டு! மெர்சல் காட்டிய தம்பதிகள் என பதிவு!!

 

நெல்லை வீரத்தம்பதிக்கு அமிதாப், ஹர்பஜன் பாராட்டு! மெர்சல் காட்டிய தம்பதிகள் என பதிவு!!

நெல்லை மாவட்டம் கடையத்தில், கொள்ளையர்களை விரட்டியடித்த வீரத்தம்பதிக்கு பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன், கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் உள்ளிட்டோர் பாராட்டு தெரிவித்துள்ளனர். 

நெல்லை மாவட்டம் கடையத்தில், கொள்ளையர்களை விரட்டியடித்த வீரத்தம்பதிக்கு பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன், கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் உள்ளிட்டோர் பாராட்டு தெரிவித்துள்ளனர். 

நெல்லை கடையம் அருகே உள்ள கல்யாணிபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சண்முகவேல். இவரது மனைவி செந்தாமரை. இவர்களது மூன்று பிள்ளைகளும் வெளிமாநிலங்களில் வேலை செய்து வருகின்றனர். சண்முகவேல் தனது வீட்டு  வாசலில் அமர்ந்திருந்த நிலையில், அவரை பின்பக்கம் இருந்து துண்டால் கழுத்தை நெரித்தார். சத்தம் கேட்டு வெளியில் வந்த சண்முகவேலின்  மனைவி செந்தாமரை கொள்ளையர்களை கையில் கிடைக்கும் பொருட்களைக் கொண்டு வீசி தாக்கினார். 

Nellai

சுதாரித்துக்கொண்ட சண்முகவேல் அங்கிருந்த சேர்களை கொண்டு கொள்ளையர்களைத் தாக்கினார். கணவன் மனைவி இருவரும் அசராமல் கொள்ளையர்களைத் தாக்கியதில் அவர்கள் அங்கிருந்து தப்பி ஓடினர். அரிவாளை கையில் வைத்துக் கொண்டு மர்ம நபர்கள் இரண்டு பேரும் வெட்ட முயன்ற போதும், சளைக்காத தம்பதி கொள்ளையர்கள் இருவரையும்  ஓட ஓட விரட்டி அடித்தனர். இருப்பினும் செந்தாமரை அணிந்திருந்த 5 சவரன் தங்க சங்கிலியைப் பறித்து கொண்டு மர்மநபர்கள் தப்பி ஓடி விட்டனர்.

 

இரவில் ஆயுதங்களுடன் வந்த கொள்ளையர்களைக் கண்டு அஞ்சாமல் , வயதான தம்பதியினர் தைரியமாக அவர்களுடன் போராட்டம் நடத்தியது தொடர்பாக நாளிதழ் ஒன்றில் வந்த செய்தியை, தனது டுவிட்டர் பக்கத்தில் அமிதாப் பதிவிட்டு, பாராட்டுகளை தெரிவித்துள்ளார். மிகவும் துணிச்சலான செயல் என்றும் வீரத்தம்பதிக்கு பாராட்டு தெரிவித்துள்ளார். 

 

 

கொள்ளையர்களை விரட்டியடித்த சண்முகவேல் , செந்தாமரை தம்பதியினருக்கு கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங்கும் பாராட்டு தெரிவித்துள்ளார். வீரத்தம்பதியின் போராட்ட வீடியோவை பதிவிட்டுள்ள அவர், துணிச்சலான இந்த செயலுக்கு தலைவணங்குவதாக கூறியுள்ளார். முதிய தம்பதி மெர்சல் காட்டிவிட்டதாகவும், இது தமிழர்களின் நேர்கொண்ட பார்வை என்றும் ஹர்பஜன் தெரிவித்துள்ளார்.