நெல்லை கண்ணன் மருத்துவமனையில் அனுமதி.. கைதுக்கு பயந்து நடிப்பதாகக் கூறி பாஜகவினர் போராட்டம் !

 

நெல்லை கண்ணன் மருத்துவமனையில் அனுமதி.. கைதுக்கு பயந்து நடிப்பதாகக் கூறி பாஜகவினர் போராட்டம் !

நெல்லை கண்ணன், மத்திய உள்துறை அமைச்சர் மற்றும் பிரதமர் மோடியை கடுமையாக விமர்சித்தும் அமித்ஷாவின் சோலியை முடிக்க வேண்டும் என்று கூறினார்.

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக எஸ்டிபிஐ கட்சி சார்பில் நெல்லையில் நடந்த மாநாட்டில் தமிழ் இலக்கியவாதியும் காங்கிரஸ் மூத்த நிர்வாகியுமான நெல்லை கண்ணன் கலந்து கொண்டார்.

ttn

அதில் நெல்லை கண்ணன், மத்திய உள்துறை அமைச்சர் மற்றும் பிரதமர் மோடியை கடுமையாக விமர்சித்தும் அமித்ஷாவின் சோலியை முடிக்க வேண்டும் என்று கூறினார். அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இது குறித்து, பாஜகவினர் அளித்த புகாரின் பேரில் நெல்லை கண்ணன் மீது 3 பிரிவுகளின் கீழ் காவல்துறையினர் வழக்குப்பதிவு  செய்துள்ளனர். 

tn

இந்நிலையில், ஏற்கனவே உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த நெல்லை கண்ணன் இன்று நெல்லை வண்ணாரப்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரை ஆம்புலன்ஸ் அழைத்து செல்ல வந்த போது அந்த ஆம்புலன்ஸை வழிமறித்து தடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ttn

ஆம்புலன்ஸை தடுத்த பாஜகவினரை காவல்துறையினர் அப்புறப்படுத்தி அவரை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அதனால், கைதுக்கு பயந்து நெல்லை கண்ணன் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளதால் அவரை உடனே கைது செய்ய வேண்டும் கூறி பாஜகவினர் முழக்கமிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.