நெல்லை கண்ணனுக்கு 13 ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் !

 

நெல்லை கண்ணனுக்கு 13 ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் !

மத்திய உள்துறை அமைச்சர் மற்றும் பிரதமர் மோடியை கடுமையாக விமர்சித்தும் அமித்ஷாவின் சோலியை முடிக்க வேண்டும் என்று கூறினார்.

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக எஸ்டிபிஐ கட்சி சார்பில் நெல்லையில் நடந்த மாநாட்டில் தமிழ் இலக்கியவாதியும் காங்கிரஸ் மூத்த நிர்வாகியுமான நெல்லை கண்ணன் கலந்து கொண்டார்.அதில் நெல்லை கண்ணன், மத்திய உள்துறை அமைச்சர் மற்றும் பிரதமர் மோடியை கடுமையாக விமர்சித்தும் அமித்ஷாவின் சோலியை முடிக்க வேண்டும் என்று கூறினார். அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

ttn

அதனால், அவரை கைது செய்ய வேண்டும் என்று பா.ஜ.கவினர் ஆளுநரிடமும் காவல்நிலையத்திலும் புகார் அளித்தனர். அவர் உடல் நல குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டதால் அவரை கைது செய்ய வேண்டும் என்று கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர். அதனையடுத்து, பிரதமர் மோடி, அமித்ஷா பற்றி அவதூறாகப் பேசியதற்காக நெல்லை கண்ணன் நேற்று இரவு கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். நெல்லை கண்ணனை வரும் 13-ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்குமாறு நீதித்துறை நடுவர் நீதிமன்ற நீதிபதி பாபு உத்தரவிட்டுள்ளார்.