நெல்லையில் நேர கட்டுப்பாட்டை மீறி பட்டாசு வெடித்த 6 பேர் கைது; சிறுவர்களுக்கு எச்சரிக்கை

 

நெல்லையில் நேர கட்டுப்பாட்டை மீறி பட்டாசு வெடித்த 6 பேர் கைது; சிறுவர்களுக்கு எச்சரிக்கை

உச்ச நீதிமன்றம் விதித்த நேரக் கட்டுப்பாட்டை மீறி பட்டாசு வெடித்ததாக நெல்லை மாவட்டத்தில் 6 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்

நெல்லை: உச்ச நீதிமன்றம் விதித்த நேரக் கட்டுப்பாட்டை மீறி பட்டாசு வெடித்ததாக நெல்லை மாவட்டத்தில் 6 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

தமிழகம் முழுவதும் தீபாவளி பண்டிகை இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. நடப்பாண்டில் தீபாவளி பண்டிகையன்று உச்ச நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில், காலை 6 மணி முதல் 7 மணி வரையும், மாலை 7 மணி முதல் 8 மணி வரையும் பட்டாசு வெடிக்கலாம் என தமிழக அரசு கால நிர்ணயம் செய்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மேலும், இதனை மீறுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தமிழக அரசு எச்சரித்திருந்தது.

இந்நிலையில், உச்ச நீதிமன்றம் விதித்த நேரக் கட்டுப்பாட்டை மீறி பட்டாசு வெடித்ததாக நெல்லை மாவட்டத்தில் 6 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்கள் மீது அனுமதிக்கப்பட்ட நேரத்தை தாண்டி பட்டாசு வெடித்தது, வெடிபொருட்கள் வைத்திருந்தது என்பன உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும், நேரக் கட்டுப்பாட்டை மீறி பட்டாசு வெடித்ததாக 7 சிறுவர்களை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்ற போலீசார் அவர்கள் மீது புகார் பதிவு செய்து பின்னர், எச்சரித்து அனுப்பியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.