நெல்லையில் கடத்தப்பட்ட நடராஜர் சிலை ஆஸ்திரேலியாவிலிருந்து மீட்பு!

 

நெல்லையில் கடத்தப்பட்ட நடராஜர் சிலை ஆஸ்திரேலியாவிலிருந்து மீட்பு!

நெல்லை கல்லிடைக்குறிச்சியில் கடத்தப்பட்ட நடராஜர் சிலை ஆஸ்திரேலியா மியூசியத்திலிருந்து மீட்கப்பட்டது. 

 சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு சிறப்பு அதிகாரி பொன் மாணிக்கவேல் நடத்திய விசாரணையில் ஆஸ்திரேலியா வில் 16 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த நடராஜர் சிலை இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அங்கு நடத்தப்பட்ட தீவிர வேட்டையில் அந்த சிலை நெல்லையிலிருந்து கடத்தப்பட்டதென்று கண்டுபிடிக்கப்பட்டது.

pon

75.7 செ.மீ. உயரமுள்ள அந்த வெண்கலச் சிலையை 2001ஆம் ஆண்டு அமெரிக்காவின் ஓலிவர் போர்ஜ் அண்ட் பெரண்டன் லிங்க் நிறுவனத்திடம் இருந்து தெற்கு ஆஸ்திரேலியா அருங்காட்சியகம் வாங்கி யிருந்தது. அது தமிழகத்திலிருந்து கடத்தப்பட்ட சிலை என ஆஸ்திரேலியாவிடம் பேச்சுவார்த்தை நடத்தி பொன். மாணிக்கவேல் அந்த சிலையை மீட்டுள்ளார். ஆஸ்திரேலிய மியூசியத்தில் இருந்து மீட்கப்பட்டு டெல்லி கொண்டுவரப்பட்ட நடராஜர்சிலை நாளை மறுநாள் சென்னை கொண்டு வரப்படுகிறது.