நெல்லையில் ஏப்.26, மே.3ல் முழு ஊரடங்கு- மாவட்ட ஆட்சியர் உத்தரவு

 

நெல்லையில் ஏப்.26, மே.3ல் முழு ஊரடங்கு- மாவட்ட ஆட்சியர் உத்தரவு

தொற்று நோயான கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க மத்திய அரசு கடந்த மாதம் 25ம் தேதி முதல் மே 3ம் தேதி வரை மொத்தம் 40 நாட்கள் நாடு தழுவிய ஊரடங்கை நடைமுறைப்படுத்தியுள்ளது.

தொற்று நோயான கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க மத்திய அரசு கடந்த மாதம் 25ம் தேதி முதல் மே 3ம் தேதி வரை மொத்தம் 40 நாட்கள் நாடு தழுவிய ஊரடங்கை நடைமுறைப்படுத்தியுள்ளது. இந்த சூழ்நிலையில் நேற்று முதல் சில துறைகள் இயங்கும் வகையில் ஊரடங்கை மத்திய உள்துறை அமைச்சகம் தளர்த்தியது. இருப்பினும், கொரோனா வைரஸ் தீவிரமாக உள்ளதால் தமிழக அரசு அறிவித்துவிட்டன. 

ஊரடங்கு பணியில் பீகார் போலீசார்

இந்த சூழலில் நெல்லை மாநகராட்சி ஆணையர் கண்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நெல்லையில் ஏப்.26, மே.3 ஆகிய 2 நாள்களிலும் மருத்துவமனை, மருந்தகங்கள் தவிர மற்ற அனைத்து கடைகளும் மூடப்பட வேண்டும். நெல்லை மாநகரத்தில் 26 ம் தேதியும் மே 03ம் தேதியும் பொதுமக்கள் 100% சமூக இடைவேளி கட்டாயம் கடைபிடிக்க வேண்டும். கொரனா தொற்றை முற்றிலும் தடுக்கும் வகையில் முன்னெச்சிரிக்கை நடவடிக்கையாக 2 நாட்கள் 100% சமூக விலகலை கடைபிடிக்க வேண்டும்” என தெரிவித்துள்ளார். நெல்லையில் 62 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.