நெல்லையப்பர் கோயிலில் ஐப்பசி மாத திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம் 

 

நெல்லையப்பர் கோயிலில் ஐப்பசி மாத திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம் 

நெல்லையப்பர் கோயிலில் ஐப்பசிமாத  திருவிழா கொடியேற்றத்துடன் நேற்று தொடங்கியது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு நெல்லையப்பரையும் காந்திமதி அம்மனையும் தரிசனம் செய்தனர் .

நெல்லையப்பர் கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி மாத  திருவிழா வெகு விமர்சையாக நடைபெறுவது வழக்கம். இந்தாண்டிற்கான ஐப்பசி மாத திருவிழா நேற்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. 

nellalai

இவ்விழாவினை முன்னிட்டு அம்மன் சன்னதியில் அமைந்துள்ள கொடி மரத்துக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. அதனையடுத்து அலங்கரிக்கப்பட்ட கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டு, சிறப்பு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. 

nellaiyappar

ஐப்பசிமாத  திருவிழா வருகிற 7-ந் தேதி வரை நடைபெறுகிறது . விழா நாட்களில் தினமும் மாலையில் சுவாமிக்கும் ,அம்பாளுக்கும் சிறப்பு வழிபாடுகள் மற்றும் வீதி உலா நடைபெறுகிறது இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை நெல்லையப்பர் கோயில் நிர்வாகிகள் மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் மிகவும் சிறப்பாக செய்து வருகின்றனர்.