நெல்லைனா அல்வா மட்டுமில்லை, சிக்கனும் ஃபேமஸ்தான்!  வைரமாளிகைக்கு வாங்க!

 

நெல்லைனா அல்வா மட்டுமில்லை, சிக்கனும் ஃபேமஸ்தான்!  வைரமாளிகைக்கு வாங்க!

நெல்லைக்கு வருபவர்கள் தவறாமல் இறங்கி அடிக்கும் இடம் ஹோட்டல் வைரமாளிகை.
இந்த ஹோட்டல் புரோட்டாவையும்,பொறித்த நாட்டுகோழியையும் ஒரு முறை சுவைத்தவர்களை துரத்திக்கொண்டே இருக்கும்.
இவர்கள் செய்யும் பொறித்த நாட்டுக்கோழி ரெசிப்பி மிகவும் சிம்பிளானது தான். ஆனால், இரண்டு கண்டிசன்கள் உண்டு!
கோழி அசல் நாட்டுக்கோழியாக இருக்க வேண்டும். 750 கிராம் எடையிருக்க வேண்டும்.சற்று குறையலாம் கூடிவிடக் கூடாது.

chicken

தேவையான பொருட்கள்
உரித்து பெரிய துண்டுகளாக வெட்டப்பட்ட நாட்டுக் கோழி – 750 கிராம்
தயிர் – 50 மில்லி
எழுமிச்சம் பழம் – 1
பூண்டு பேஸ்ட் – 2 ஸ்பூன்
மிளகாய்தூள் 2 ஸ்பூன் 
தேங்காய் எண்ணை 
தேவையான அளவு உப்பு

முதலில் , பெரிய பெரிய துண்டுகளாக வெட்டப்பட்ட சிக்கனை ஒரு கத்தியால் கீறி நன்றாக கழுவி வையுங்கள்.

chicken

மிளகாய் தூள்,உப்பு இரண்டையும் தயிறுடன் சேர்த்து குழையுங்கள்.அதில் ,எலுமிச்சை பழத்தை பிழியுங்கள்,மீண்டும் நன்றாக கலந்து எடுத்துக்கொள்ளுங்கள்.நீர் சேர்க்கவே கூடாது.
இப்போது , இந்தக் கலவையை சிக்கன் துண்டுகளின் மேல் பூசுங்கள். கீறி விடப்பட்ட இடங்களில் கொஞ்சம் தாராளமாகவே பூசுங்கள். அப்போதுதான் காரமும் உப்பும் கறியின் உள்ளே நன்றாக ஊடுருவும்.
கறித்துண்டுகளை அப்படியே ஒரு மணி நேரம் ஊற வையுங்கள்.ஒரு மணி நேரத்துக்குப் பிறகு, ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில், நாம் வைத்திருக்கும் சிக்கன் முழ்கும் அளவுக்கு தேங்காய் எண்ணெய் ஊற்றுங்கள். எண்ணை சூடானதும் சிக்கனைப் போட்டு பொன்னிறமாகப் பொறித்து எடுத்தால் வாசனையான வைரமாளிகை சிக்கன் ரெடி. அது மொறுமொறுப்பாக இருக்கும்போதே முடித்து விடுங்கள்.