நெருப்பு வளையச் சூரிய கிரகணம்: ஆலமரத்தின் மீது பட்டு வித்தியாசமாகக் காட்சியளித்த நிழல்..வைரல் வீடியோ

 

நெருப்பு வளையச் சூரிய கிரகணம்: ஆலமரத்தின் மீது பட்டு வித்தியாசமாகக் காட்சியளித்த நிழல்..வைரல் வீடியோ

சூரிய கிரகணத்தின் போது, சூரியனுக்கும் பூமிக்கும் இடையே நிலவு வரும். அப்போது, பூமியிலிருந்து பார்த்தால் நிலவு சூரியனை மறைப்பது போலத் தோன்றும்.

பூமியைச் சுற்றும் நிலவும், சூரியனைச் சுற்றும் பூமியும் நேர்கோட்டில் சந்திப்பதை நாம் கிரகணம் என்று அழைக்கிறோம். சூரிய கிரகணத்தின் போது, சூரியனுக்கும் பூமிக்கும் இடையே நிலவு வரும். அப்போது, பூமியிலிருந்து பார்த்தால் நிலவு சூரியனை மறைப்பது போலத் தோன்றும். வழக்கமாக நிகழும் கிரகணம் போன்று அல்லாது, இந்த முறை நெருப்பு வளையச் சூரிய கிரகணம் தோன்றியது. காலை 8:06 மணிக்குத் தொடங்கி 11:15 மணிக்கு நிறைவடைந்தது. இது சுமார் 30 ஆண்டுகளுக்குப் பிறகு நிகழ்வதாகக் கூறப்படுகிறது. இதனைக் காண, தமிழகத்தின் பல்வேறு இடங்களில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. 

ttn

அதே போல, தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பாக சூரிய கிரகணத்தை காணக் கடலூர் வெள்ளி கடற்கரையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. இதனைக் காண நூற்றுக்கணக்கான மக்கள் திரண்டனர். அங்கு,தொலைநோக்கி, சூரிய வடிகட்டி கண்ணாடி, பிம்ப பிரதிபலிப்பு உள்ளிட்ட முறைகளில் சூரிய கிரகணம் மக்களுக்குக் காண்பிக்கப்பட்டது. 

shadoe

 கடலூர் பெரியார் கல்லூரி வெளியே ஆலமரம் ஒன்று உள்ளது. அதில், சூரிய கிரகணத்தின் ஒளி பட்டு அந்த ஆலமரத்தின் நிழல் நிலா வடிவம் போலக் காட்சியளித்துள்ளது. இதனை அங்கிருந்த மக்கள் ஆச்சாரத்தியதுடன் கண்டு ரசித்துள்ளனர். அந்த காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.